மேலும் அறிய

திருவண்ணாமலை: வேட்டவலம் அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

’’வேட்டவலத்திற்கு அருகே உள்ள செத்தவரை, கிழ்வாலை போன்ற ஊர்களிலும் ஏற்கனவே பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன’’

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தின் மலையருகே பண்டைய கால ஓவியங்கள் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா கொடுத்த தகவலின் படி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவத்தைச் சேர்ந்த மதன்மோகன், பழனிச்சாமி, பாலமுருகன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து பண்டைய கால ஓவியத்தை கண்டு பிடித்துள்ளனர் ,  இது குறித்து வரலாற்று ஆய்வுநடுவத்தை சேர்ந்த பால முருகனிடம் பேசினோம். நாங்கள் வாரம்தோறும் கல்வெட்டுகளை ஆய்வு செய்து மக்களுக்கு புதிய புதிய செய்திகளை சொல்வோம் அப்படி தான் எங்களுக்கு ஒரு பாறை ஓவியம் பற்றி தகவல் வந்தது அதனை ஆய்வு செவதற்கு எங்களுடைய இருசக்கர வாகனத்தில் பயணத்தை துவக்கினோம்.

திருவண்ணாமலை: வேட்டவலம் அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

வேட்டவலத்திற்கு வடகிழக்காக அமைந்துள்ள மலைப்பகுதியில் நல்லான் பிள்ளை பெற்றாள் என்ற கிராமத்தின் நந்தன் கால்வாய் அருகே ஒரு பாறையில் இரண்டு பகுதிகளாக ஒவியங்கள் காணக்கிடைத்தன. இதில் பாறையின் உயரமான பகுதியில் உள்ள ஓவியத் தொகுதியில் மீன் அல்லது ஆமை போன்ற தோற்றம் கொண்ட செஞ்சாந்து நிறத்தில் சுமார் 3 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட ஒரு ஒவியமும் அதன் அருகில் ஊர்வன போன்ற வடிவம் கொண்ட ஓவியம் சுமார் 2 அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்டுள்ளது. அதன் அருகில் சுமார்  ஒரு அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட சிறிய அளவிலான மீன் அல்லது ஆமை போன்ற வடிவம் கொண்ட மற்றொரு ஒவியமும் அமைந்துள்ளது. இந்த பாறையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ஓவியத் தொகுதியில் இரண்டு மனிதர்கள் உருவமும் வடிவியல் சார்ந்த குறியீடு கொண்ட ஒவியங்களும் உள்ளன. இந்த ஓவியங்கள் வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள பாக்கம் கிராமத்திலும்  ஏரிக்கரையின் அருகில் உள்ள மற்றொரு பாறை ஒன்றில் மங்கலான நிறமுடைய வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியபட்டன, 

திருவண்ணாமலை: வேட்டவலம் அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

இவ்வோவியங்கள் குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இங்கு இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன என்றும் முதலாவது பிரிவில் உள்ள ஓவியங்கள் வெண்சாந்து மற்றும் செஞ்சாந்து நிறங்கள் கலந்த ஓவியங்கள் உள்ளன என்றும் இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் இரண்டாவது தொகுதி ஓவியங்கள் வடிவியல் சார்ந்த குறியீடுகள் தனியாகவும் மனித உருவங்களும் சேர்ந்து  வரையப்பட்டுள்ளன. இதில் கோடுகள் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் காட்டப்பட்டுள்ளது. சில குறியீடுகள் கீழ்வாலை மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள குறியீடுகள் போன்ற வடிவத்தை ஒத்துள்ளது. மேலும் இங்கு மனித உருவங்களில் ஆண்குறி வரையப்பட்டுள்ளது இதுபோன்று ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. அருகில் உள்ள பாக்கம் கிராம எல்லையில் உள்ள ஓவியங்கள் மங்கிய நிலையில் மனித உருவங்கள் மட்டும் வரையப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை: வேட்டவலம் அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

இந்த ஓவியங்கள்  பெருங்கற்கால ஓவியங்களாக கருதப்படுகின்ற ஓவியங்கள் போல உள்ளது. என கூறினார். இதன் அருகில் உள்ள செத்தவரை, கிழ்வாலை போன்ற ஊர்களிலும் ஏற்கனவே பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. தொடர்ச்சியாக இப்பகுதியில் பாறை ஓவியங்கள் கிடைத்து வருவது இதன் தொல்லியல் முக்கியத்துவத்தையும் அக்கால மனிதர்களின் கலை சிறப்பினையும் உணர்த்துகிறது. இந்த ஓவியங்களை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறை பாதுகாத்தும் ஆவணப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் விரும்புகின்றனர் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
July 2024 Rasi Palan: நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
July 2024 Rasi Palan: நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Nagarjuna: விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜூனா.. தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி நபருடன் சந்திப்பு!
Nagarjuna: விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜூனா.. தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி நபருடன் சந்திப்பு!
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Embed widget