மேலும் அறிய

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை தூய்மை பணி முன்னேற்பாடுகள்.. ஒரு தொகுப்பு

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று நடைபெறவுள்ள மாபெரும் கிரிவலப்பாதை தூய்மை பணிக்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வருகிற இன்று நடைபெற உள்ள மாபெரும் கிரிவலப்பாதை தூய்மை பணிக்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் காவல் துறை, மருத்துவத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை தூய்மை பணி முன்னேற்பாடுகள்.. ஒரு தொகுப்பு

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்

இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி வருகிற 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 2.32 மணியளவில் தொடங்கி மறுநாள் 16-ம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 1.17 மணி வரை உள்ளது. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடத்து செல்ல வசதியாக அனைத்து கோபுர நுழைவு வாயில்களிலிருந்து நடைபாதைகளில் நிழற்பந்தல்கள், மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் தேங்காய் நார் தரைவிரிப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் இளைப்பாறும் கூடங்களும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி குளியல் அறைகள், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நீர் மோர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பக்தர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை தூய்மை பணி முன்னேற்பாடுகள்.. ஒரு தொகுப்பு

சித்ரா பவுர்ணமி நாட்களில் கோவிலின் உட்புறத்திலும், நகரம் முழுவதிலும் 24 மணிநேரமும், தடையின்றி மின்சாரம் வழங்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலை சுற்றும் பாதையில் மின் விளக்குகள் அனைத்தும் தொடர்ந்து எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதையில் வருகிற 10-ம் தேதி மாபெரும் தூய்மை பணி நடைபெற உள்ளது. இதில் 1,220 பேர் ஈடுபட உள்ளனர். கிரிவலப்பாதை நகராட்சி மற்றும் ஊராட்சியில் வருவதால் நகராட்சியில் 6 குழுக்களும், ஊராட்சிகள் சார்பில் 10 குழுக்களும் அமைக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் தூய்மை அருணை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பல்வேறு கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பணி 10-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி சுமார் 4 மணி நேரம் நடைபெற உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கிரிவலப்பாதையை தூய்மையாக பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென தெரிவித்தார். 

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை தூய்மை பணி முன்னேற்பாடுகள்.. ஒரு தொகுப்பு

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப், உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், தூய்மை அருணை மற்றும் அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர். சித்ரா பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்கள் தங்களது பூஜை பொருட்களை கொண்டு செல்லவும், பிற தின்பண்டங்கள், விளையாட்டு சாமான்களை தங்களது இடங்களுக்கு எடுத்து செல்ல துணிப்பைகள், சணல் பைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்குபையுடன் வருகை புரிந்து பங்குகொள்ள வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget