மேலும் அறிய
Advertisement
என்ன கொடும சார்! இந்த காலத்திலும் இப்படியா? - மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதிய பேருந்து கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்த நிலையில், ஆனால் அவலங்கள் மட்டும் மாறவில்லை.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடம் உள்ளது. அதனை தனி நபர் ஒருவர் ஏலம் எடுத்த நிலையில் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் நேரடியாக மூடப்படாத கால்வாயில் கலந்து சென்றது.
ஒருகட்டத்தில் கால்வாய் நிரம்பி சாலையில் தேங்கி நின்றது குறித்து சமூக ஆர்வலர்கள் அதனை சுட்டி காட்டிய நிலையில் கழிப்பிடம் ஒப்பந்தம் எடுத்த நபர் சார்பில் 2 பேரை கால்வாயில் இறக்கி அதனை வெட்டவெளியில் அள்ளி போட்டு உள்ளனர்.
இதனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கழிப்பறையில் இருந்து செப்டிக் டேங்க் கட்டி கழிவுகளை அதில் விடாமல் நேரடியாக கால்வாயில் விட்டு இருப்பதும், அதனை அள்ள எந்திரங்கள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் மனித கழிவுகளை அகற்ற மனிதனைப் பயன்படுத்திய நிகழ்வு மனித நேயத்தை இழக்க செய்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில் இந்த நிகழ்வுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion