மேலும் அறிய

திருவண்ணாமலை சிறையில் இறந்த தங்கமணியின் உடலில் எலும்பு முறிவு : உடற்கூராய்வு அறிக்கையினால் பரபரப்பு

திருவண்ணாமலை பகுதியை விசாரணைக்கு அழைத்து சென்ற மலை குறவர் இனத்தைச் சார்ந்த தங்கமணியின் உடலில் எலும்பு முறிவு மற்றும் காயங்கள் உள்ளதாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கண்ணி ஊராட்சி தட்டரணை என்ற கிராமம் உள்ளது. அங்கு பழங்குடி இனத்தைச் சேர்ந்த 48 வயதான தங்கமணி என்பவர் வசித்து வந்தார். அவர் விஷ சாராயம் காய்ச்சியதாகக் கூறி, கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி காவல் நிலையத்தால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை 27-ம் தேதி மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தங்கமணியின் உறவினர்கள் தங்கமணியை காவல்துறையினர் அடித்தே கொன்றதாக தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில், அவரது உடல்கூராய்வு அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை சிறையில் இறந்த தங்கமணியின் உடலில் எலும்பு முறிவு : உடற்கூராய்வு அறிக்கையினால் பரபரப்பு

உடற்கூறு ஆய்வு அறிக்கை விவரங்கள்;

உடல்கூராய்வு அறிக்கையை பற்றி ஒரு மருத்துவரிடம் பேசுகையில் தங்கமணியின் உடலின் மீது கை,கால் போன்ற இடங்களில் சிறிது (சிராய்ப்பு) போன்ற காயங்கள் உள்ளதாகவும் கழுத்து பகுதியில் பாதி நாக்கு கடித்து உள்ளதாகவும், இடது புற நெஞ்சுக்கு கீழே மூன்றாவது மற்றும் நான்காவது விலா எலும்புகளில் முழுமையடையாத எலும்பு முறிவு காணப்பட்டதாக குறிப்பு உள்ளதாகவும், விலா எலும்பு வலது பகுதியில் உள்ள நுரையீரலில் நீர்த்தேக்கம் உள்ளதாக உள்ளது. மேலும் அவருடைய உடலில் உள்ள அனைத்து 12 முதல் 24 மணி நேரத்துக்கு முன்பு ஏற்பட்டிருக்கவேண்டும் என்றும், இடது கையில் பின்புறத்தில் சுண்டு விரல் அருகே 4 சென்டி மீட்டருக்கு 3 சென்டி மீட்டர் அகலத்துக்கு எலும்பு ஆழத்துக்கு சிவந்த காயம் ஒன்று இருந்ததாகவும் இது இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக நிகழ்ந்திருக்கும் என்றும் உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவருடைய உடற்கூராய்வு செய்வதற்கு 24 மணிநேரம் முன்பாக அவர் இறந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

திருவண்ணாமலை சிறையில் இறந்த தங்கமணியின் உடலில் எலும்பு முறிவு : உடற்கூராய்வு அறிக்கையினால் பரபரப்பு

இந்த உடற்கூராய்வு அறிக்கை, இறப்புக்கான காரணம். குறித்து சரியாக தெரியாததால் சில தசைகள், அதாவது வயிற்று பகுதி மற்றும் அவருடைய அணிந்திருந்த துணி மற்றும் சில உடல் கூறு ஆய்வு தசைகளை சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கை வந்த பிறகே இதைப்பற்றி முழு விவரம் தெரியவரும் என்றார்.

அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 28-ம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் ராஜசேகரன் என்பவர் மூலம் சடலம் கொண்டுவரப் பட்டதாகவும் அன்று பிற்பகல் 3.55 மணிக்குத் தொடங்கி 5.30 மணிக்கு உடற்கூராய்வு முடிவடைந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தங்கமணியின் உயிரிழப்பு குறித்து சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்;

தங்கமணியின் உடற்கூறு ஆய்வு முடிவடைந்த பிறகு இந்த அவைக்கு நான் தெளிவுபடுத்துவதாக சொல்லி இருந்தேன் என்றார், அதுகுறித்து தகவல் என்னவென்றால் திமலை மதுவிலக்கு அமலாக பிரிவினர் மதுவிலக்கு வழக்குப்பதிவு செய்து 26-ஆம் தேதி தங்கமணியை கைது செய்து திருவண்ணாமலை கிளை சிறையில் ஒப்படைத்த பிறகு, தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்ட காரணத்தால் 27ம் தேதி உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை நீதித்துறை நடுவரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டது.

காவல்துறை வடக்கு மண்டல தலைவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இறந்தவரின் குடும்ப உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அனைத்தும் காண்பித்து அதனைப்பற்றி விளக்கி இருக்கிறார்.

திருவண்ணாமலை சிறையில் இறந்த தங்கமணியின் உடலில் எலும்பு முறிவு : உடற்கூராய்வு அறிக்கையினால் பரபரப்பு

மேலும் இதுகுறித்து சரியான முறையில் புலன் விசாரணை நடத்தப்படும் என்று கூறியதன் பிறகு உறவினர்கள் தங்கமணியின் உடலை பெற்றுக்கொண்டனர். இந்த வழக்கின் விசாரணை மாநில புலனாய்வு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் தங்கமணியை கைது செய்த காவல்துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர், மாநில குற்றப்பிரிவு புலனாய்வு துறையினர் அளிக்கக்கூடிய அறிக்கை வைத்து அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget