மேலும் அறிய

Pongal Festivel 2023: களைகட்டும் பொங்கல்; விற்பனையில் சக்கைப் போடு போடும் ஆரணிப்பட்டு...! மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழர்களின் பொங்கல் திருநாளை பாரம்பரிய பட்டு புடைவை அணிந்து பெண்கள் பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றார்கள்.

பட்டு என்றாலே, நமக்கு முதலில் ஞாபகம் வருவது காஞ்சிப் பட்டு என்கிறார்கள். ஆனால், ஆரணி பட்டு காஞ்சிப் பட்டுக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை. ஆரணியில் மட்டும் 1-லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பட்டு நெசவுத் தொழிலை நம்பி இருக்கிறார்கள். ‌இங்கு உற்பத்தியாகும் பட்டுப் புடவைகளை வாங்கிச் சென்று காஞ்சிபுரம் பட்டு என்று விற்கும் விற்பனையாளர்களும் உண்டு என்கிறார்கள் ஆரணி பகுதி நெசவாளர்கள்.

பட்டுப் புடவைக்குத் தேவையான பட்டு நூல், பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படும். மல்பரி புழுவின் கூட்டில் இருந்து இந்தப் பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது. ஒரு சேலைக்கு சுமார் ஒன்றரைக் கிலோ நூல் தேவைப்படும். கச்சா நூலை பட்டு நூல் ஆலையில் கொடுத்துப் பாவு செய்து, அதன் மீது கலர் சாயம் போடப்படுகிறது.‌

Pongal Festivel 2023: களைகட்டும் பொங்கல்; விற்பனையில் சக்கைப் போடு போடும் ஆரணிப்பட்டு...! மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!

புடவையின் நீளம், அகலத்துக்கு ஏற்ப தனித் தனியாகப் பிரித்து நெசவுக்குக் கொடுத்தால், பட்டுச் சேலை ரெடி. கிட்டத்தட்ட ஒரு லட்சம் சேலை டிசைன்கள் உண்டு. டிசைனைப் பொறுத்து, ஒரு சேலைக்கு 60 கிராம் முதல் ஒன்றரைக் கிலோ வரை பட்டு ஜரிகை தேவைப்படும். தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜரிகை விலையும் கூடுகிறது. இதனால், சேலையின் விலையும் அதிகரித்து விடுகிறது. கைத்தறி கையினால் பயன்படுத்தப்படும் தரியின் மூலம் ஒரு பட்டுப் புடவையைச் செய்து முடிக்க, 10 முதல் 15 நாட்கள் ஆகின்றது. இயந்திரம் மூலம் நெய்யப்படும் ஒரு பட்டுப்புடவை செய்து முடிக்க 4 நாட்கள் முதல் 7 நாட்கள் வரையில் ஆகும்.  

Pongal Festivel 2023: களைகட்டும் பொங்கல்; விற்பனையில் சக்கைப் போடு போடும் ஆரணிப்பட்டு...! மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!

இங்கு பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை, பட்டு சுடிதார் மெட்டீரியல், பட்டு வேட்டி, பட்டு அங்கவஸ்திரம் என்று விதவிதமான பட்டு ஆடைகள் தயாரிக்கிறோம். ஆரணி கைத்தறி பட்டு சேலைகள் வாங்க வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஆரணி கைத்தறி பட்டு புடவையை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இது மட்டுமின்றி வெளிமாவட்டம் வெளிமாநிலத்திற்கு பட்டு ஏற்றுமதி செய்யபட்டு வருகின்றது. மேலும் தமிழர் திருநாளான , பொங்கல் பண்டிகைக்கு பெண்கள் விரும்பி உடுத்துவது பட்டு சேலைகள் இதனால் பொங்கல் பண்டிகைக்கு பலவிதமான வண்ணமயமான ரகங்களில் கைத்தறி பட்டு சேலைகளை நெசவாளர்கள் நெய்து விற்பனை செய்வது வருகின்றனர். 

Pongal Festivel 2023: களைகட்டும் பொங்கல்; விற்பனையில் சக்கைப் போடு போடும் ஆரணிப்பட்டு...! மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!

ABP NADU நிறுவனத்தில் இருந்து பட்டு சேலைகள் உற்பத்தியாளர் கோகுல கிருஷ்ணனிடம் பேசுகையில்;  நாங்கள் எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து தலைமுறை தலைமுறையாக பட்டு சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்று கூறும் பழமொழிக்கு ஏற்றார் போல் பொங்கல் திருநாளுக்கும், இதன் பிறகு வரும் முகூர்த்த நாட்களுக்கும் புதிய டிசைன்கள் போடி, கரைப்புட்டா, வித்தோட் பார்டர் கரைகள், பாட்டி ரகம், உடல் சிறப்பு , சாமுந்திரிகா , பழைய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒருப்பக்க சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளோம் மேலும் பொங்கலுக்கு மற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விதமாகவும் குறைந்த விலையில் பட்டு சேலைகளை உற்பத்தி செய்துள்ளோம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிக அளவில் பட்டு சேலைகள் விற்பனை நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார். 

Pongal Festivel 2023: களைகட்டும் பொங்கல்; விற்பனையில் சக்கைப் போடு போடும் ஆரணிப்பட்டு...! மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!

துணிக்கடையில் பட்டுப்புடவை வாங்குவதற்கு வந்த ஷர்மிளாவிடம் பேசுகையில்;

தீபாவளி பண்டிகை, பிறந்தநாள் மற்றும் உள்ளூர் கோவில் திருவிழாக்கள் போன்ற வகைகளில் அதிக அளவில் நாங்கள் சுடிதார், குற்தி, ஜீன்ஸ்போன்ற துணிகளை தான் வாங்கி அணிவோம் பொங்கலுக்கும், பட்டுப்புடவைற்க்கும் மிகபெரிய நெருக்கம் உண்டு ஏனென்றால் இவைகள் அனைத்தும் தமிழர்களின் பாரம்பரியம் தமிழர்களின் கலாச்சாரமான பாரம்பரிய உடை சேலைகள் தான். அதில் பட்டு சேலைகள் மிகவும் அழகாக இருக்கும் அதிலும் பெண்களுக்கு நியற்தியாக இருக்ககூடயதும், பெண்கள் என்றாலே அழகு தான் அதிலும் பட்டு சேலை கட்டிய பிறகு பெண்களை மிகவும் அழகாக காட்டக்கூடியதும் பட்டு சேலைகள் தான் , அதனால் தான் பட்டு சேலைகள் எடுப்பதற்கு வந்துள்ளேன். பட்டு சேலையைய் உடுத்துக்கொண்டுதான் பொங்கல் வைத்து பொங்கல் தினத்தை கொண்டாட போறேன் பொங்கலின் சுவையை ருசிக்க போறேன் என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget