வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசு; அவர்களுக்கு இருப்பது இதயமா? கல்லா? - அமைச்சர் துரைமுருகன்
பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். நிறுத்தத்தில் நிற்காத பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்

வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் வழிதடங்களுக்கான புதியதாக 22 பேருந்துகள் இயக்க துவக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது:
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து வேதனை கண்ணீர் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனை பேரிடராக மத்திய அரசு அறிவிக்காதது அவர்களுக்கு இதயத்தில் இருப்பது இதயமா? அல்லது கல்லா? என தெரியவில்லை.
புதிய பேருந்து நிலையத்துக்கு மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தவேண்டும்
வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில பேருந்துகள் நிற்பது இல்லை என புகார் வருகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் வரும் போது பேருந்தை அதிகம் இயக்க வேண்டும். உங்க கணக்குக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வர மாட்டார்கள், அவங்க கணக்கு தா நாமா போகனும். பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பேருந்து நிறுத்தத்திற்கு செல்லாத பேருந்து மீது நடவடிக்கை
குறிப்பாக காட்பாடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் நெடு தூரம் நடந்து பேருந்து ஏறுராங்க. இதனால் காலி பசங்க தகராறு செய்கிறார்கள். ஆகையால் அந்த வழியே பேருந்தை இயக்க வேண்டும் ஓட்டுனர் வேலை என நினைக்க வேண்டாம் சேவை என நினையுங்கள். திமுகவின் வைப்பு நிதியே தொமுசா தான். பள்ளி கல்லூரி மாணவர்களின் வருகையின்போது தேவைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்துகள் பயணிக்க வேண்டும் இல்லாவிடில் அவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து செல்வது ஒரு சேவை அது ஒரு தொழில் அல்ல இதில் டிக்கெட் கணக்கு பார்க்கக் கூடாது என பேசினார். ராணிப்பேட்டை டெல் வரை பேருந்து செல்வது இல்லை அந்த பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

