ஜோலார்பேட்டையில் மிஸ்ஸஸ் ஆகி... ரயிலில் மிஸ் ஆன பெண்... கல்கத்தா மீட்பும் ‛கல்தா’ கதையும்!
அவருக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைத்ததால், பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும், பிறகு தனது தோழியை தொடர்பு கொண்டு மேற்குவங்கம் அழைத்துச் செல்லக் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி நடுவூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (28) தனியார் டிராவல்ஸ் கம்பெனி நடத்திவருகிறார். காமராஜ்க்கும் அதே பகுதியை சேர்ந்தவர் ஷோபா (20) என்பவருக்கும் கடந்த மே மாதம் 23 ஆம் தேதி , பவ்ரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டது .
திருமணத்துக்கு முன்பு வரை திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த ஷோபாவுக்கு இந்த திருமணத்தில் விருப்புமில்லை என்று கூறப்படுகின்றது . எனவே பலமுறை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் , தற்கொலை செய்துகொள்ள முயற்சியும் செய்துள்ளார் .
திருப்பூரில் பணிபுரியும் பொழுது ஷோபாவின் நெருங்கிய தோழியாக இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணிடம் , நடந்த விபரத்தை ஷோபா தெரிவித்துள்ளார் , அப்பொழுது திருப்பூரில் இருந்த ஜெயஸ்ரீ , ஷோபாவை சந்திக்க நாயக்கனேரி நடுவூர் கிராமத்திற்கு வந்த ஜெயஸ்ரீ , ஷோபா மற்றும் அவரது கணவர் காமராஜுடன் தங்கியுள்ளார்.
காமராஜ் வீட்டில் இருந்த அனைவரிடமும் மிகவும் அன்பாய் பழகிய ஜெயஸ்ரீ , தனக்கு சொந்த ஊரில் ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும் , அதற்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக ட்ரெயின் டிக்கெட் புக் செய்து இருப்பதாகவும் , எனவே தன்னை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து வழி அனுப்பி வைக்க ஷோபா கண்டிப்பாக வர வேண்டும் என்று , ஜெயஸ்ரீ காமராஜிடம் கூறியுள்ளார் . இதற்கு சம்மதித்த காமராஜ் ,ஜெயஸ்ரீயை வழியனுப்பி வைக்க தனது மனைவியை அழைத்துக் கொண்டு , (ஜூலை 21 ) புதன் கிழமை இரவு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் சென்றுள்ளார் . கல்கத்தா போகும் ட்ரைனில் ஏறி அமர்த்தபடி ஷோபாவிடம் ஜன்னல் வழியாக பேசி கொண்டிருந்துள்ளார் ஜெயஸ்ரீ . ட்ரெயின் கிளம்பும் கடைசி நேரத்தில் தனது தோழிக்கு குடிக்க தண்ணீர் வாங்கி வந்து கொடுக்கும்படி ஷோபா தனது கணவரை கேட்டுள்ளார் . அவசர அவசரமாக தண்ணீர் வாங்கிவர காமராஜ் சென்று வருவதற்குள் , அந்த கல்கத்தா ட்ரெயின் நடை மேடையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது .
ரயில் புற்பட்டு விட்டதே என்று தனது மனைவியை தேட ஆரம்பித்த காமராஜ்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது . நடைமேடையில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் , அவரது மனைவியும் கடைசி நிமிடத்தில் ரயிலில் புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர் . ஒரு வேலை தவறுதலாக ரயிலில் ஏறியிருக்கலாம் என்று சந்தேகித்து , தனது மனைவியின் தோழி ஜெயஸ்ரீ செல் போனுக்கு முயற்சி செய்த காமராஜ் , ஜெயஸ்ரீயின் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்த உடன் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் .
அன்று இரவே ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார் காமராஜ் , அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து . திருப்பூரில் அவர்கள் வேலை செய்துவந்த தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்டு , ஜெயஸ்ரீயின் விலாசத்தை பெற்று, அவர்களை தேடி ஒரு தனிப்படை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது .
10 நாட்களுக்கு பிறகு , சப்- இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ஷோபாவின் தோழியின் ஊரான மேற்கு வங்காளத்திற்கு சென்று அங்கிருந்த ஷோபாவை மீட்டு நேற்று ஜோலார்பேட்டைக்கு அழைத்து வந்துள்ளனர் .
போலீசாரிடம் அவரளித்த வாக்குமூலத்தில் , அவருக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்துவைத்ததால் , பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் . பிறகு தனது தோழிக்கு தொடர்புகொண்டு தன்னை , அவளதுசொந்த ஊரான மேற்குவங்காளத்திற்கு அழைத்து செல்லும்படி கேட்டுக்கொண்டதின் பேரில் , இந்த திட்டம் போட்டு , மேற்குவங்காளத்துக்கு சென்றதாக தெரிவித்தார் . ஷோபாவுக்கு கவுன்சிலிங் கொடுத்த போலீசார் நேற்று , ஷோபாவை அவரது கணவர் காமராஜிடம் ஒப்படைத்தனர் .