மேலும் அறிய

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் 128 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் நேற்றைய நிலவரப்படி 128 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது

தமிழகத்தில் அதிகளவு மழை பெய்யக்கூடிய தரக்கூடிய வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால். இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் இன்று மதியம் வரை தொடர்ந்து மிதமான சாரல் மழையும், சில பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த தொடர் சாரல் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் 128 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கத்தில் 8.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. கீழ்பென்னாத்தூர்-38.60 மி.மீ, தண்டராம்பட்டு- 14.05 மி.மீ, போளூர்- 9.40 மி.மீ, செய்யாறு- 20.00மி.மீ, வெம்பாக்கம்- 15.30 மி.மீ, ஜமுனாமரத்தூர்- 12.20 மி.மீ, வந்தவாசி- 51.70 மி.மீ, சேத்துப்பட்டு- 27.30 மி.மீ, ஆரணி-7.80 மி.மீ, கலசபாக்கம்-19.20 மி.மீ, செங்கம்- 8.40 மி.மீ, திருவண்ணாமலை-12.80 மி.மீ மழை பதிவாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் இன்றைய நிலவரப்படி 128 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. 75-ல் இருந்து 100 சதவீதம் வரை 58 ஏரிகளும், 50-ல் இருந்து 75 சதவீதம் வரை 79 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 312 ஏரிகளும் நிரம்பி உள்ளது. 25 சதவீதத்திற்கு கீழ் 94 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. மீதமுள்ள 26 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படாமல் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக வந்தவாசியில் 51.8 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் 128 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது

கண்ணமங்கலம் பகுதியில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக கண்ணமங்கலம் வழியாக ஓடும் நாகநதியில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.குப்பநத்தம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் செங்கம் செய்யாற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் செங்கம் செய்யாறு கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழை நீர் ஏரி நிரம்பி அனைத்து மழை மழை நீரும் உபரி நீராக வெளியேறுகிறது இந்த மழை நீரானது செல்லும் கால்வாய்கள் தூர்வார படாததால் தண்ணீர் அனைத்தும் விவசாய நிலத்திற்குள் சென்று முழுமையாக விளைநிலங்களை பாதித்து வருகின்றது

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget