மேலும் அறிய

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜக செயல் - கே.பாலகிருஷ்ணன்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இதுவரை 44 பேர் உயிர் இழந்ததுடன் பல ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை அடுத்த 5வது கிலோ மீட்டர் தொலைவில் ஒன்றிய மத்திய அரசின் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சுங்கச்சாவடியை நோக்கி புறப்பட்டு (100 மீட்டர்) சென்றனர். அப்பொழுது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜக செயல் - கே.பாலகிருஷ்ணன்

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்; 

திருவண்ணாமலை இனாம் காரியந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி என்பது சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், நான்கு வழி சாலைகளை அமைக்காமல் இருவழிச்சாலையாக இருக்கும் பொழுது சுங்கச்சாவடி அமைத்து ஒன்றிய அரசு கொள்ளையடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். சுங்கச்சாவடி அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் இருந்த பொழுதிலும் அனைத்து விதிமுறைகளையும் மீறி திருவண்ணாமலையில் சுங்கச்சாவடி அமைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். சுங்கச்சாவடியை எடுப்பதற்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவ்வித பலனும் இல்லை என்றும், மாநில அரசு கூறுவதையும் ஒன்றிய அரசு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இது தொடர்பாக தம்மை போல கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொழுது தமிழக அரசும், காவல் துறையும் தங்களை அடக்குவது நியாயம் தானா? என்று கேள்வி எழுப்பினார். திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் அதேபோல 20 சதுர கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக சுங்கச்சாவடியில் அனுமதி வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜக செயல் - கே.பாலகிருஷ்ணன்

பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கில் குடிசை வீடு கட்டினால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றம் செய்து விடுகிறது. ஆனால் ஒன்றிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி அலுவலகத்தை மாவட்ட நிர்வாகம் நீக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜகமான செயல் என்றும் ஜனநாயகத்திற்கு விரோதம் என்றும் தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இதுவரை 44 பேர் உயிர் இழந்ததுடன் பல ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளதை சுட்டிக்காட்டினார். தங்களது சொத்தையும் இழந்து, குடும்பத்தையும் இழந்து, நடுவீதியில் நின்று இருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றிய பொழுதும் அதனை ஆளுநர் நிராகரித்திருப்பது, தொடர்ந்து விளக்கம் கேட்கும் தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாக செயல்படுகிறார் என பகிரங்கமாக குற்றச்சாட்டினார்.

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget