மேலும் அறிய

அதிமுக ஆட்சி காலத்தில் கடல் அளவில் ஊழல் நடந்துள்ளது - செல்வபெருந்தகை

இது கல்வி கண்ணை திறந்த காமராஜருக்கு பெருமை தேடி தந்த மாவட்டமாக உள்ளது. பள்ளிக்கல்விதுறையில் திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பாக உள்ளது என்பதற்கு இந்த ஒரு பள்ளி எடுத்துகாட்டாக உள்ளது.

திருவண்ணாமலை நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை குறித்தும், உணவுப் பொருட்கள் இருப்பு விவரம், இருப்பு பதிவேட்டின் விவரம், வருகை பதிவேட்டின் படி மாணவர்களின் எண்ணிக்கை, மாணவிகளின் கல்வித் தரம் பற்றியும், மாணவிகளிடம் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விளக்குகள், மின்விசிறிகள், மின்சார சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அத்தியந்தல் கிராமத்தில் உள்ள மாநில விதைப்பண்ணையிலும் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2021-2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார். ஆய்வில் வேளாண் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு அறநிலையங்கள் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அதற்கான பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் இருந்து விரிவான அறிக்கையினை கேட்டறிந்தார். 

அதிமுக ஆட்சி காலத்தில் கடல் அளவில் ஊழல் நடந்துள்ளது - செல்வபெருந்தகை

சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை பேட்டியளிகையில்; 

தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றது. இந்த நெறிமுறைகளை கடந்த ஆட்சி காலத்தில் பின்பற்றாமல் பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளார்கள். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைபற்றி கூட்டத்தில் விவாதித்து உள்ளோம். அதேபோன்று தற்போது உள்ள பள்ளிகளை தரம் உயர்த்துவது கடந்த காலங்கள் போன்று இல்லாமல் தற்போது உள்ள அரசு வழிகாட்டுதல் முறைப்படி தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம் என்றார். சிறு விவசாயிகளுக்கு மானியத் தொகையில் டிராக்டர்கள் வழங்கப்படுகிறது. இந்த டிராக்டர்கள் சம்பந்தப்பட்டவர் 4 ஆண்டுகள் பயன்படுத்த வேண்டும். மானியத்துடன் டிராக்டர் வாங்கி விட்டு 2 ஆண்டுகளில் டிராக்டர்களை விற்பனை செய்து உள்ளனர். அவர்கள் அந்த மானிய தொகையை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும். அதனை வசூல் செய்யவில்லை என்றால் கிரிமினல் சடத்தை கொண்டு கைது செய்யப்பட்டுவார்கள் என்றார்.

அதிமுக ஆட்சி காலத்தில் கடல் அளவில் ஊழல் நடந்துள்ளது - செல்வபெருந்தகை

திருவண்ணாமலையில் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த போது தமிழகத்திலேயே இல்லாத அளவிற்கு 6, 7 ஆண்டுகளாக 100 சதவீதத்திற்கு மேல் பள்ளிகளில் மாணவிகளை சேர்த்து உள்ளனர். இது கல்வி கண்ணை திறந்த காமராஜருக்கு பெருமை தேடி தந்த மாவட்டமாக உள்ளது. பள்ளிக்கல்விதுறையில் திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பாக உள்ளது என்பதற்கு இந்த ஒரு பள்ளி எடுத்துகாட்டாக உள்ளது என்றார், இந்த பள்ளியில் சேர பல மாணவிகள் விருப்பம் தெரிவித்து உள்ளதால் அந்த பள்ளியில் சிறப்பு நிதியின் மூலம் புதிய கட்டிடங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்றார், மேலும் தரையில் அமர்ந்து பயிலும் மாணவர்களுக்கு பழைய நகராட்சி கட்டிடங்களில் மாணவர்களை வைத்து பாடங்கள் எடுத்து கொள்ளாமல் என்றார்.   

அதிமுக ஆட்சி காலத்தில் கடல் அளவில் ஊழல் நடந்துள்ளது - செல்வபெருந்தகை

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கடல் அளவில் ஊழல் நடைபெற்று உள்ளது. மருந்து, ஆவின் பால், ஸ்மார்ட் சிட்டியில் ஊழல் என எல்லாத்திலும் ஊழல் செய்து உள்ளனர். திட்டமிடாமல் பல திட்டங்களை அவர்கள் செயல்படுத்தி உள்ளனர் என்றும் கூறினார். இந்த கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன் (பண்ரூட்டி), ராஜா (சங்கரன்கோயில்), பிரகாஷ் (தளி), மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஜோதி (செய்யாறு), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் அருண்லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget