மேலும் அறிய

Crime : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காவி உடையில் கஞ்சா விற்பனை... போலி சாதுவை தட்டித்தூக்கிய போலீஸ்!

ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிவந்து கிரிவலப்பாதையில் சாது போர்வையில் கஞ்சா விற்பனை செய்த போலி சாது போலீசார் கைது செய்தனர்.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். இந்த கோவில் பின்புறம் சிவனே மலையாக காட்சி தருகிறார். இந்த மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. இங்கு கிரிவலம் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் பகுதிளில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இதுமட்டுமின்றி கிரிவலப் பாதையில் ஏராளமான சாதுக்கள் தங்கி வசித்து வருகின்றனர்.

தற்போது திடீரென பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து காவிவேட்டியை கட்டிக்கொண்டு தங்கியுள்ளனர். இவர்களில் ஒருசிலர் கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகின்றது. மேலும் புகார் வரும் சமயங்களில் காவல்துறையினர் கிரிவலப்பாதையில் சோதனை நடத்தி கஞ்சா வைத்திருப்பவர்களை பிடித்து வருகின்றனர். இருந்தபோதிலும் கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது என்றும் மலை சுற்ற வரும் ஆன்மீக பக்தர்களின் முன்னிலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

Crime : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காவி உடையில் கஞ்சா விற்பனை... போலி சாதுவை தட்டித்தூக்கிய போலீஸ்!

இந்நிலையில் மர்மநபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் ஆகிய காவல்துறையினர் இன்று கிரிவலப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நித்தியானந்தா ஆசிரமம் அருகே கிரிவலப்பாதையில் காவி உடை அணிந்த ஒருவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.பின்னர் அவரை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சாதுவை தாலுக்கா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Crime : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காவி உடையில் கஞ்சா விற்பனை... போலி சாதுவை தட்டித்தூக்கிய போலீஸ்!

அந்த விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, ஜீவா நகரை சேர்ந்த ஆறுமுகம் வயது (48) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூபாய் 7 ஆயிரம் மதிப்புடைய கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர் ஆந்திராவில் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து திருவண்ணாமலையில் சாதுக்களின் போர்வையில் பிறருக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்தததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிரிவலப்பாதையில் சில நாட்களுக்கு முன்பு கஞ்சா போதையில் போலி சாது பக்தர்களிடம் ரகலையில் ஈடுப்பட்து குறிபிட தக்கது. திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற போலி சாது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
Embed widget