மேலும் அறிய
Advertisement
வேலூரில் மேயர் பதவி யாருக்கு?-கருணாநிதியின் நினைவுநாளில் மோதிக் கொண்ட உடன்பிறப்புகளால் பதற்றம்!
வேலூர் மேயர் பதவியை பெறுவதில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் விஜய்யின் தரப்புக்கும், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயனின் தரப்புக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சி அமைப்புகளின் சார்பில் பொது இடங்களில் புகைப்படங்கள் வைக்கப்பட்டு கருணாநிதியின் மரியாதை செலுத்தப்பட்டது. வேலூர் கிரீன் சர்கிள் அருகே அமைந்துள்ள வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மத்திய மாவட்டச்செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான A.P.நந்தகுமார் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், காட்பாடி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் V.S.விஜய் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். தமிழத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக கட்சி சார்பில் யாருக்கு வேலூர் மாநகராட்சியின் மேயர் பதவி, ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை திமுக நிர்வாகிகளிடையே எழுந்தது.
ஏற்கெனவே வேலூர் சென்ற மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் திருமதி கார்த்திகேயனியை எதிர்த்துத் தோல்வியுற்ற திமுக கட்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்குத்தான் வழங்க வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனின் தரப்புக்குத்தான் மேயர் பொறுப்பை தரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கேட்டனர். அப்பொழுது காட்பாடி தொகுதியின் பொறுப்பாளர் V.S.விஜய்யின் ஆதரவாளரான முன்னாள் திமுக கவுன்சிலர் ராமலிங்கத்திற்கும் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயனின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கம் தாக்கப்படுவதை பார்த்த விஜய்யின் ஆதரவாளர்களுக்கும் கார்த்திகேயனின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் மத்திய மாவட்டச் செயலாளர் AP நந்தகுமார் இருபிரிவினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த மோதலை படம்பிடிக்க வேலூர் மத்திய மாவட்ட திமுகவின் கட்சி அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற பத்திரிகையாளர்களையும் தடுத்து நிறுத்தி மாவட்ட செயலாளர் நந்தகுமார் ஒருமையில் திட்டியுள்ளார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் நந்தகுமாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தின்போதே மேயர் பொறுப்பு யாருக்கு என உடன்பிறப்புகள் கச்சைகட்டியது வேலூர் மாநகர மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசிப்பதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion