மேலும் அறிய

அனுமதி இல்லாமல் ஸ்பா... பாலியல் தொழில்.. விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் அதிரடி கைது

திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி அனுமதி இல்லாமல் ஸ்பா நடத்தி, அதில் பாலியல் தொழில் செய்ததாக இன்று காவல்துறையினரால் கைது செய்யபட்டார்.

தமிழக அரசியலில் நடிகர் விஜய் விரைவில் அடி எடுத்து வைப்பார். அதற்காக முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக சத்தம் இல்லாமல் செய்து வருவதாக  விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார். முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். மேலும் அடுத்த கட்டமாக காமராஜர் பிறந்தநாள் அன்று 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு பாடசாலை அமைத்து ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவ வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக  பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக  திருச்சியில் விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட  செயலாளராக இருக்கக்கூடிய செந்தில்குமார் பல்வேறு திட்டங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார், அவருடைய முதல் மாநாடு திருச்சியில் நடக்கும், திருச்சி என்றாலே ஒரு திருப்புமுனை தான்.  அதன் அடிப்படையில் மாநாடு திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

அனுமதி இல்லாமல் ஸ்பா... பாலியல் தொழில்.. விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்  அதிரடி கைது

மேலும், அதே சமயம் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  திருச்சிக்கு அவ்வபோது வருகை தந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செந்தில்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி கருமண்டபம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கருமண்டபம் சிங்கராயர் நகரில் செயல்பட்டு வரும் ஷைன் ஸ்பாவிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஸ்பா அனுமதி பெறாமல் செயல்படுவது தெரியவந்தது. அங்கு ஸ்பாவின் மேலாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லட்சுமிதேவி என்பவரும் மேலும் இரண்டு பெண்களும் இருந்தனர். இதையடுத்து இரண்டு பெண்களையும் காவல்துறையினர் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஸ்பாவின் மேலாளர் லட்சுமிதேவியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில் ஸ்பாவின் உரிமையாளர் திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்த செந்தில் குமார்  என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்திய உரிமையாளர் செந்தில் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில் குமார்,  தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களை பாராட்டி ஊக்குவித்து வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட செயலாளர் இதுபோன்ற சமூகவிரோத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த விஜய் ரசிகர் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் குமார் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டது. விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Embed widget