பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை - திருச்சி ஆணையர் எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வளாகம் அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சா, போதைமாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட அரசால் தடைசெய்யபட்ட போதைபொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்க மாநகர் மட்டும் அல்லாமல் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக திருச்சியை பொறுத்தவரை போதை பழக்கத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தான் அதிக அளவில் பாதிக்கபடுகிறார்கள். ஆகையால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடடிக்கை எடுக்க வேண்டும் என பொற்றோர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளி ,கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை தடுப்பதற்காக மாவட்ட முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் கேட்டபோது, திருச்சியில் பள்ளி - கல்லூரி பகுதிகளில் போதை பொருட்கள் விற்றால் கட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தீவிர வாகன தணிக்கை செய்தும், ரவுடிகள் மீது, நடவடிக்கைகளை எடுக்கவும், இளைஞர்களின் நலன் காக்கும் பொருட்டு போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் பள்ளி, பருவம் கல்வி கற்கும் மட்டுமல்ல, ஒழுக்கத்தையும் ,கடைபிடிக்கவும் தான். பள்ளி பருவத்தில் கவனச் சிதறல்கள் கூடாது, போதை பழக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் உபயோகிக்கப்படுத்தாமல் இருக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாததால் போதைக்கு மாணவர்கள் அடிமையாகிறார்கள். மாணவர்களை ஆசிரியர்கள் நல்வழிப்படுத்த வேண்டும். எல்லோரும் ஒன்றாக கூட்டு முயற்சி எடுத்து போதை இல்லாத திருச்சி மாநகரை மாற்ற உறுதி கொள்வோம் என்றார். முக்கியமாக பள்ளி, கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும், ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் மக்கள் உடனடியாக காவல்துறைக்கு whatsapp 9626273399 என்ற எண்ணி இருக்கும், காவல்துறை அவசர உதவி எண்களான 100, 1098, மற்றும் 14417 தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு வரும் தகவலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக தகவல் கொடுப்பவர்களின் முகவரியை ரகசியமாக காக்கப்படும். மேலும் திருச்சி மாநகரில் போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்பவர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்