மேலும் அறிய

திருச்சி சிறப்பு முகாம் சிறை போலவே உள்ளது.. நளினி பேட்டி

ராஜீவ் வழக்கில் விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ளவர்களை உடனடியாக வெளியில் அனுப்ப வேண்டும் - நளினி பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது உலகையே உலுக்கியது. இந்த கொலையில் தொடர்புடையதாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கைதான 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் அதை கிடப்பில் போட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை விடுதலை செய்திடுமாறு நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்து நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
திருச்சி சிறப்பு முகாம் சிறை போலவே உள்ளது.. நளினி பேட்டி

இதனை தொடர்ந்து  ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சியில் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முருகனின் மனைவி நளினி, ஜெயக்குமார் மனைவி சாந்தி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர். 

அவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நளினி கூறியது..  சிறப்பு முகாமில் உள்ளவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்.  மத்திய அரசும், மாநில அரசும் அவர்களை விரைவாக முகாமிலிருந்து வெளியே அனுப்ப வேண்டும். சாந்தன் இலங்கைக்கு செல்கிறேன் என்கிறார். நானும் என் கணவர் முருகனும் லண்டன் செல்ல விரும்புகிறோம். ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய இருவரும் அது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நமக்கு நல்லது செய்தவர்களை சங்கடத்திற்குள்ளாக்க நான் விரும்பவில்லை அதனால் தான்  முதலமைச்சரை சந்திக்கவில்லை என்றார். முதலமைச்சர் எங்களுக்கானதை பார்த்து கொள்வார் நம்பிக்கை உள்ளது.


திருச்சி சிறப்பு முகாம் சிறை போலவே உள்ளது.. நளினி பேட்டி

மேலும் 16 ஆண்டுகள் என் மகளை பிரிந்துள்ளேன், லண்டன் சென்று அவரோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம் என்றார். தொடர்ந்து பேசிய நளினி முகாம் என்பது தற்போது சிறை போல் உள்ளது. அதனால் அவர்களை வெளியில் அனுப்ப வேண்டும். மேலும் சில மக்கள் எங்கள் விடுதலையை எதிர்க்கிறார்கள். நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவள் என் தாய்க்கு பெயர் வைத்ததே காந்திதான். இந்திரா காந்தி இறந்த போதும் சரி, ராஜீவ் காந்தி இறந்த போதும் சரி நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். அப்போது எங்கள் வீட்டில் யாரும் சாப்பிடவில்லை என்னை ராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த பழியிலிருந்து மீண்டு வர வேண்டும். இந்த வழக்கிலிருந்து விடுதலையானால் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செய்ய வேண்டி உள்ளேன் அதை செய்வேன்.

ராஜீவ் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார் என்பது என எனக்கு தெரியாது. இலங்கை செல்வதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என தான் நினைக்கிறோம் என கூறினார். தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உணர்கின்றீர்களா என்கிற கேள்விக்கு? நீங்கள் எல்லாம் இருக்கும்போது(பத்திரைக்கையாளர்கள்) எனக்கு என்ன குறை. உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை என்றார்.

தலைப்பு செய்திகள்

Trichy Power Cut: திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
Trichy Power Cut: திருச்சியில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - இதோ முழு லிஸ்ட்
திருச்சியில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - இதோ முழு லிஸ்ட்
திருச்சியில் ₹400 கோடி சாலைத் திட்டம் முடக்கம்! டெண்டர் விடுவதில் தாமதம் ஏன்?
திருச்சியில் ₹400 கோடி சாலைத் திட்டம் முடக்கம்! டெண்டர் விடுவதில் தாமதம் ஏன்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget