Trichy Power Shutdown: திருச்சி உறையூரில் நாளை(29-06-2026) மின் தடை.. எவ்வளவு நேரம் கரண்ட் இருக்காது! முழு விவரம்
Trichy power cut (29-05-2026): திருச்சி மாவட்டத்தில் நாளை உரையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 29, 2026, வெள்ளிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் மற்றும் உரையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
கே.கே.நகர், இந்தியன்வங்கி காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பாநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சி காமாலைபட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரிநகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ் சாலை, செம்பட்டு ஒரு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ, குளவாய்பட்டி, ராயல்வில்லா, இ.பி.காலனி, முத்துநகர், ராணிமெய்யம்மைநகர், மொராய்ஸ்சிட்டி, எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி, பசுமைநகர், அந்தோணியார்கோவில் தெரு, வி.எம்.டி.ரோடு, கலைஞர்நகர், இந்திரநகர், மொராய்ஸ்கார்டன், அம்மன்நகர், எம்.ஜி.ஆர்.நகர்
உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தேரோட்டத்தையொட்டி காவேரிநகர், வடிவேல்நகர், செல்வமாரியம்மன்கோவில்தெரு, நவாப்தோட்டம், நெசவாளர்காலனி, வாத்துக்காரத்தெரு, பசுமடம், கீரைக்கொல்லை தெரு, சன்னதிதெரு, பஞ்சவர்ணசுவாமி கோவில்தெரு, சின்னசவுராஷ்டிராதெரு, டாக்கர்ரோடு, ஏ.யு.டி.காலனி, தியாகரா ஜநகர், மின்னப்பன்தெரு, காமாட்சிஅம்மன்கோவில்தெரு, குழுமணி மெயின்ரோடு, ஏ.ஆர்.எஸ்.நகர், மீன்மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
இதையும் படிங்க: School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























