மேலும் அறிய

திருச்சி பஞ்சப்பூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! ஆம்னி பேருந்து நிலையம் எப்போது திறப்பு?

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் திறக்கபட்டதில் இருந்து போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. ஆம்னி பேருந்துகளுக்காக பஞ்சப்பூரில் தனியாக ஒரு பேருந்து நிலையம் 17.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறக்கப்பட்டதில் இருந்து போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகளுக்காக பஞ்சப்பூரில் தனியாக ஒரு பேருந்து நிலையம் 17.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. 

திருச்சி மாநகர் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஞ்சப்பூரில் புதிதாக 38 ஏக்கரில் 408.36 கோடி ரூபாய் செலவில் பேருந்து முனையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து முனையத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி பெயர் வைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இது தமிழ்நாடு முழுக்க இயக்கப்படும் பஸ்களுக்கு ஒரு முக்கியமான இடமாக இருக்கும்.

இதனை கடந்த மே 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜூலை 16- ந் தேதி முதல் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இங்கு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டும் வரை, ஆம்னி பேருந்துகள் பஞ்சப்பூர் அருகில் உள்ள காலி இடத்தில் இருந்து கிளம்பும். மத்திய பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்கள் நிற்க தடை செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பஸ் ஸ்டாண்டில் நெரிசல் குறைந்துள்ளது.

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் வெளியூர் பஸ்கள் 345 தரை தளத்திலும், நகர பஸ்கள் 56 முதல் தளத்திலும் நிற்கும். சென்னையில் இருக்கும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் போன்று இங்கும்ட அனைத்து வசதிகளும் உள்ளது. பயணிகளுக்காக 20 டீக்கடை, 12 சாப்பாட்டு கடை, 10 சிற்றுண்டி கடை உள்ளது. பேருந்து நிலையத்தை சுத்தம் செய்வதற்கு 228 பேர், பாதுகாப்புக்கு 52 போலீசார் உள்ளனர். ஆட்டோ, டாக்ஸி, இ-டாக்ஸி வசதியும் இருக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்களுக்காக 3 பேட்டரி வண்டிகள் உள்ளது. அவசர உதவிக்கு மருத்துவ குழுவும் உள்ளனர்.

பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு ஆம்னி பஸ்கள் ஒழுங்காக வர வேண்டும் என்று சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து பஸ்களும் சி.பி-2 செக்போஸ்ட் வழியா தான் வர வேண்டும். மதுரை வழியாக செல்லும் பஸ்களை தவிர, மத்த பஸ்கள் அனைத்தும் பஞ்சப்பூர் சந்திப்பு வரைக்கும் சென்று யூ-டர்ன் எடுத்து திரும்ப வேண்டும். இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள்ளயும், வெளியேயும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வெளியூர் மற்றும் நகர பேருந்துகள் என அனைத்தும் பஞ்சப்பூரில் இருந்து தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை, திருப்பதி, தஞ்சாவூர், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், மணப்பாறை, மதுரைன்னு பல ஊர்களுக்கு பஸ்கள் செல்ல வழி செய்யப்பட்டு உள்ளது. சென்னை, திருப்பதி பஸ்கள் நம்பர் 1 டோல்கேட் வழியாகவும், தஞ்சாவூர் பஸ்கள் துவாக்குடி வழியாகவும் பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட்டை அடையும்.

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் திறக்கபட்டதில் இருந்து போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. ஆம்னி பேருந்துகளுக்காக பஞ்சப்பூரில் தனியாக ஒரு பேருந்து நிலையம் 17.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் வரை, தற்காலிகமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் ஒதுக்கப்பட்ட காலி இடத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் ஸ்டாண்ட் திருச்சியோட வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம். நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திருச்சியோட பொருளாதாரம் இன்னும் நன்றாக இருக்கும். இந்நிலையில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதனால் திருச்சியின் மிக முக்கியமான இடமாக பஞ்சப்பூர் மாறிவிட்டது என்று கூறினால் மிகையில்லை. 

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget