மேலும் அறிய

திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் போராட்டம்

திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே ஜங்சன் பகுதியில் குட்ஷெட்டில் சரக்குகள் ஏற்றவரும் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில், அந்த லாரிகளை குட்ஷெட்டில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், லாரி டிரைவர்களையும், சுமைதூக்கும் தொழிலாளர்களையும் அவர் தரக்குறைவாக பேசியதுடன், அவர்களை தள்ளி விட்டு தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஆகையால் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டரின் செயலை கண்டித்து, ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் குட்ஷெட் சாலையில் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மிரட்டினர். இதனால், அவர்களை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் போராட்டம்
 
மேலும் இந்த போராட்டம் காரணமாக நாகையில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நெல் மூட்டைகள் அனைத்தும் 89 பெட்டிகளில் தேக்கமடைந்தன. ஏற்கனவே நெல் மூட்டைகளை ஏற்றிய லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து, ரெயில்வே வணிக மேலாளர் மோகனபிரியா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமைப்பணி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், உங்கள் பிரச்சினையை எடுத்துபூர்வமாக கொடுங்கள். சம்பந்தப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சரக்குகளை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுபோன்று அதிகாரிகள் நடந்துக்கொண்டால் கண்டிபாக பெரிய அளவில் போராட்டம் நடத்தபடும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Embed widget