மேலும் அறிய

திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏசிஎல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை  கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர். அவர்கள் கடந்த 2012 ம் ஆண்டு காஜமலையில் உள்ள சொத்தினை அடமானம் வைத்து கனரா வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் அதற்கான அசல் மற்றும் வட்டியை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர்.

துணை வட்டாட்சியர் மீது தாக்குதல்:

பலமுறை வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் காஜாமலை பகுதியில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு  நேற்று முன்தினம் மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றுள்ளனர். ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் சரமாரியாக அவர்களை தாக்கி உள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மண்டல துணை வட்டாட்சியர் பிரேம் குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன்  திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து திருச்சி மேற்கு வட்டாட்சியர் ராஜவேல் மற்றும் கனரா வங்கி மேலாளர் ஆகியோர் கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

இந்நிலையில் துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் அவரை தாக்கிய முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர்,  பணி புறக்கணித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து 2 நாட்களாக   தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறையினருக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 750 வருவாத்துறையினர் பங்கேற்றுள்ளனர் என தெரிவித்தனர். இந்நிலையில் இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது "வருவாய் துறையினர் ஜப்தி நடவடிக்கைகள் செல்லும் போது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள், அதேபோல நேற்று முன்தினமும்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் வருவதற்கு முன்பாகவே தாக்குதல் சம்பவம் நடைபெற்று உள்ளது. குறிப்பாக இந்த தாக்குதல் சம்பவத்திற்கு திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் தான் காரணம், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொய்யான நபர்களை கைது செய்யாமல், உண்மையான நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் துணை தாசில்தாரை தாக்கியதாக கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தேவஆசீர்வாதம், காஜாமலையை சேர்ந்த சுப்பிரமணி, ரெங்கநாதன் உள்ளிட்டோரை ஏற்கனவே கைதுசெய்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் காஜாமலை பகுதியை சேர்ந்த அசன், சையத்ஜாகீர்உசேன், ஷேக்மொய்தீன், காட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி, மாடசாமி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget