மேலும் அறிய

திருச்சி: காவிரி ஆற்றில் குளிக்க சென்ற தாய் - மகள் தண்ணீரில் மூழ்கி பலி

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய மகளை காப்பாற்ற முயன்ற தாயும் இறந்தார். கைகளை பிடித்தபடி இருவரும் இறந்து கிடந்தது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமணி மலையப்ப நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 33). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு மகேஸ்வரி (31) என்ற மனைவியும், அட்சயா (15), கனிஷ்கா (10) என்ற மகள்களும், பிரேம் (12) என்ற மகனும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மகேஸ்வரி தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இதில் கனிஷ்கா சர்க்கார்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். பிரேம் மற்றும் அட்சயா ஆகிய இருவரும் தாயுடன் தங்கி திருப்பராயத்துறையில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் கனிஷ்கா பாட்டி வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு வந்து இருந்தாள். இதைத்தொடர்ந்து மகேஸ்வரி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்குள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். குழந்தைகளை கரையோரம் நின்று குளிக்க சொல்லிவிட்டு மகேஸ்வரி துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார்.

3 பேரும் மகிழ்ச்சியுடன் ஆற்றில் குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாணவி கனிஷ்கா தண்ணீரில் விளையாடியபடியே ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் கனிஷ்கா தண்ணீரில் மூழ்கியவாறு தத்தளிக்கவே, அதைப்பார்த்த மற்ற 2 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். பிள்ளைகள் சத்தம் போடுவதை கேட்ட தாய் மகேஸ்வரி, தண்ணீரில் ஆழமான பகுதியில் கனிஷ்கா மூழ்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார். பின்னர் அவரும் ஆற்றுக்குள் சென்று மகளை காப்பாற்ற முயன்றார்.


திருச்சி: காவிரி ஆற்றில் குளிக்க சென்ற தாய் - மகள் தண்ணீரில் மூழ்கி பலி

மேலும், மகளை கட்டியணைத்தபடி பிடித்தபோது, அவரும் துரதிர்ஷ்டவசமாக தண்ணீரில் மூழ்கினார். தாயும், தங்கையும் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த மற்ற 2 பேரும் சத்தம்போட்டபடி கதறி அழுதனர். இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர். தொடர்ந்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையம், பெட்டவாய்த்தலை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொது மக்களுடன் சேர்ந்து தாயையும், மகளையும் தேடினர். சிறிது நேர தேடலுக்கு பின்னர் மகேஸ்வரியும், கனிஷ்காவும் பிணமாக மீட்கப்பட்டனர். அப்போது, மகேஸ்வரி தனது குழந்தை கனிஷ்காவின் கையை இறுகப் பிடித்தவாறு இறந்து கிடந்தது அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இன்னொரு பக்கம் மற்ற 2 பிள்ளைகளும் ஆற்றங்கரை மணலில் தாய், தங்கையின் உடல் அருகே உருண்டு, புரண்டு அழுதது அங்கு சூழ்ந்து இருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மகன், மகள்களுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget