திருச்சி: நகை பாலிஷ் செய்வதாக கூறி மோசடி - 2 பேர் கைது
வெளி மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் மணப்பாறை பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்று நீங்கள் வைத்திருக்கும் வெள்ளி மற்றும் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி மோசடி..
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி ராணி சந்திரிகா, இவர்களது மகள் சந்திரகாந்தா (வயது 24) இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று ராணி சந்திரிகா மற்றும் அவரது மகள் சந்திரகாந்தா இருவரும் வீட்டில் இருந்த போது, இந்தி பேசிக்கொண்டு வெளி மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் இவர்களது வீட்டிற்கு வந்து, நீங்கள் வைத்திருக்கும் வெள்ளி மற்றும் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கேட்டுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் மறுத்த நிலையில் சந்திரகாந்தா அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தை பாலிஷ் போட்டு தருவதாக கூறியதன் பேரில் கழட்டி கொடுத்துள்ளார். முதலில் வெள்ளி மோதிரத்தை பாலிஷ் போட்டுக் கொடுத்தவுடன், உடனே அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த ¾ பவுன் தங்கச் சங்கிலி கழட்டி கொடுத்துள்ளார்.
வெளி மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் மணப்பாறை பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்று நீங்கள் வைத்திருக்கும் வெள்ளி மற்றும் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி மோசடி - 2 பேர் கைது.@abpnadu #Trichydistrict #manapparai pic.twitter.com/rz2OhA6xRd
— Dheepan M R (@mrdheepan) October 29, 2022
இந்நிலையில், இரண்டையும் பாலிஷ் போடுவதாக கூறி சற்று நேரத்தில் ஆசிடில் போட்டவுடன் கரைந்துள்ளது. உடனே தாயும், மகளும் சுதாரித்து எனது நகையை திருப்பிக் கொடு என்று கேட்டவுடன் கை செயின் ¾ பவுன் எடுத்து கொடுத்துள்ளார். கழுத்தில் இருந்த 1½ செயின் சற்று நேரத்தில் முழுவதுமாக துண்டு துண்டாக ஆசிட்டில் கரைந்து விட்டது.
இதனை தொடர்ந்து உடனே இதனை பார்த்த தாய் மற்றும் மகள் இருவரும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த ஊர் பொதுமக்கள் இருவரையும் பிடித்து விசாரித்தபோது இருவரும் பீகார் ரகுநாத்பூர் சுபல் பகுதியை சேர்ந்த ரகுநாதன் ராம் (36) இவரது அண்ணன் மகன் கமல் கிஷோர் யாதவ் கூறியுள்ளார்கள். இதைத்தொடர்ந்து தகவலின் பேரில் வந்த மணப்பாறை காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது, அதில் ரகுநாதன் ராம் என்பவருக்கு கையில் ரத்த காயம் இருப்பதை அறிந்து இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்