மேலும் அறிய

போதைப்பொருள் தடுப்பில் திருச்சி மாவட்டம் முதலிடம்

திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில் 20 மாதங்களில் 26 லட்சம் அபராதம், 61 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் பொதுமக்களுக்கு நல்ல தரமான உணவு, தரமான மருந்து, உள்ளிட்ட வகைகள் எவ்வித பாகுபாடும் இன்றி கிடைக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.  அதேபோல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பான் மசாலா, குட்கா, உள்ளிட்ட பொருட்களின் புழக்கத்தை இந்த துறையினர் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து ஒரு சில இடங்களில் புழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் இவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து பான்பராக், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நகரப் பகுதிகளுக்குள் குறைய காரணமாக உள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ் பாபு கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட மருத்துவர் ரமேஷ்பாபு கடந்த பிப்ரவரி 2021 முதல் 2022 நவம்பர் வரை மாவட்டத்தில் உள்ள உணவு சார்ந்த வணிகர்கள் 85 சதவீதம் பேருக்கு புதிய உரிம மற்றும் புதுப்பித்தல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடந்த ஆய்வில் உணவுகளின் நடைபெற்ற சோதனையில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் 1571 எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

போதைப்பொருள் தடுப்பில்  திருச்சி மாவட்டம் முதலிடம்

இதனை தொடர்ந்து ஆய்வின் முடிவில்  கலப்படம் உள்ள உணவுகளின் மாதிரிகளைக் கொண்டு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம், மீது சிவில் வழக்குகள் 707 மற்றும் கிரிமினல் 142 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 3600 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த, கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 471 கடைகளுக்கு கூட்டுக் குற்றம் என்ற பிரிவின் கீழ் ரூ,26,89,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் படி அவசர தடையான பெறப்பட்டு 61 கடைகளுக்கு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இந்தத் துறையின் சார்பில் சமையல் எண்ணெய் மற்றும் சுழற்சி திட்டம் மூலம் உணவுகளை பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டு, திருச்சி மாவட்டத்தில் 56,333 லிட்டர் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் பயோ டீசல் ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும் உணவு நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து மீதமாகும் உபரி உணவுகளை சேகரித்து தினமும் 16,061 நபர்களுக்கு வழங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

போதைப்பொருள் தடுப்பில்  திருச்சி மாவட்டம் முதலிடம்

மேலும், உணவு கலப்பட பொருட்கள் குழந்தைகள், உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் 296 கிலோ காலாவதியான குளிர்பானங்கள் 8640 லிட்டர், கலப்பட எண்ணெய், 8450 லிட்டர், சுத்திகரிக்கப்படாத தண்ணீரை நிரப்பப்பட்ட 2000 தண்ணீர் பாட்டில்கள், டீ தூள், 3812 கிலோ கெட்டுப்போன காய்கறிகள், 56 கிலோ  ரசாயனம் தெளிக்கப்பட்ட வாழைக்காய், 640 கிலோ கெட்டுப்போன அசைவ உணவு மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள், 150 கிலோ ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழம், 8,500 கிலோ காலாவதியான உணவுப்பொருட்கள், 87 கிலோ போலி பாக்கெட் அரிசி, 50,000 கிலோ பார்மலின் தடவிய மற்றும் அழுகிய மீன்கள் 650 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி அழிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்திற்குள் உணவு பாதுகாப்பு தொடர்பாக 172 விழிப்புணர்வு கூட்டங்களும், 2,10,498 உணவு வணிகர்கள் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உலக சாதனை நிகழ்வாக 1,12,200 பள்ளி ,கல்லூரி மாணவிகளுக்கு முதலமைச்சரின் சட்டமன்ற அறிவிப்புகளை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி கையொப்பமிட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பில்  திருச்சி மாவட்டம் முதலிடம்

கடந்த ஓராண்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதிலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைப்பதிலும், தமிழகத்தில் திருச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் உணவில் கலப்படம் இருந்தாலோ, குட்கா விற்பனை செய்யப்பட்டாலோ, எவ்வித தயக்கமும் இல்லாமல் பயப்படாமல் தகவல் கொடுத்தால், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  அதேபோல் உணவு வணிகர்கள், நுகர்வோர்களுக்கு நல்ல தரமான உணவுகளை வழங்க முன்வர வேண்டும். அதேபோல் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Irunga Bhai:
Irunga Bhai: "இருங்க பாய்" குரலுக்குச் சொந்தக்காரர் இவரா? இன்ஸ்டாகிராமை அலறவிட்ட சாமானியன்!
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
Embed widget