மேலும் அறிய

Trichy: 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீசார்! ஆக்‌ஷனில் இறங்கிய திருச்சி எஸ்.பி.!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வழக்குப் பதியாமல் இருப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற தனிப்படை போலீசார் மீது எஸ்.பி. வருண்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

தொடர் நடவடிக்கை:

குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட தோறும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக  திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மணப்பாறை உட்கோட்டத்திற்கு உதவி ஆய்வாளார் லியோனி ரஞ்சித்குமார் தலைமையில் வீரபாண்டி ஷாகுல் ஹமீது, மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டு இருந்தது.

லஞ்சம் வாங்கிய தனிப்படை போலீசார்:

இந்நிலையில் தனிப்படையினர் கடந்த, 09 ஆம் தேதி, வளநாடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக ஏர் கன் (Air Gun) ஒன்றினை வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த  சதாசிவம், ராமசாமி மற்றும் நாகராஜ் ஆகியோர்களை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர்.


Trichy: 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீசார்! ஆக்‌ஷனில் இறங்கிய திருச்சி எஸ்.பி.!

 

அப்போது  3 பேர் மீது  வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக, அவர்களிடம் போலீசார்  ஒரு லட்சம் பணம் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பணத்தினை வளநாடு கைகாட்டியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் அன்று மாலையே சதாசிவம் என்பவரின் உறவினர் விஜயகுமார் மூலம் தனிப்படையினர் பணம் பெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் கிடைத்தது.

சஸ்பெண்ட்:

மேலும் இந்த  சம்பவம் குறித்து விசாரணை நடத்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்,  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடட்டார். இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட தனிப்படை போலீசாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையில் தனிப்படை போலீஸ் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 3 பேர் மீதும்  3 பிரிவின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார், உட்பட 3 காவலர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சஸ்பெண்ட்  செய்து உத்தரவிட்டார். 

மேலும், இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget