மேலும் அறிய

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக அடுத்த மாதம் மூடப்படுகிறது - அதிகாரிகள் தகவல்

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக அடுத்த மாதம் முதல் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யபட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலத்தில் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள், பஸ்கள், வேன், கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் என பல்வேறு வகையான வாகனங்கள் சென்று வருகின்றன. சில ஆண்டுகளாக பாலத்தை தாங்கும் தூண்களில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது. இந்த பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் ரூ.1 கோடியே 35 லட்சமும், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சமும், செப்டம்பரில் ரூ.15 லட்சமும், 2018-ம் ஆண்டு நவம்பரில் ரூ.80 ஆயிரமும் செலவிடப்பட்டது. மேலும் கடந்த ஆட்சியின்போது, நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தபோது, பாலம் கட்டப்பட்டு 46 ஆண்டுகள் முடிந்துவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளாலும் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டியது தெரியவந்தது. இதனால் இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை முடிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக அடுத்த மாதம் மூடப்படுகிறது - அதிகாரிகள் தகவல்

மேலும் காவிரி பாலம் அடிக்கடி சேதமடைவதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல விபத்துகளும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கேன்.என். நேரு விரைவில் பாலத்தினை முழுமையாக சீரமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். மேலும் பராமரிப்பு பணிக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு ஏற்றபடி, ரூ.6 கோடியே 87 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக போக்குவரத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து, காவல்துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் காவிரி பாலத்தில் நேரடியாக ஆய்வு நடத்தினார். அப்போது வடக்கு காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக அடுத்த மாதம் மூடப்படுகிறது - அதிகாரிகள் தகவல்

மேலும், காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளநிலையில் சிந்தாமணியில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓடத்துறை, ஓயாமரி வழியாக சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பாலத்தின் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததுடன் அருகிலியே புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கபடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
Rasi Palan Today (16-07-2026): இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Rasi Palan Today (16-07-2026): இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Embed widget