மேலும் அறிய

திருச்சி: பராமரிப்பு பணிக்காக இம்மாதம் 10-ஆம் தேதி முதல், காவிரி பாலம் மூடல்..

திருச்சி மாவட்டத்தின் அடையாளமாய் இருக்கும் காவேரி பாலத்தில் பராமரிப்பு பணிகளுக்காக வரும் 10-ஆம் தேதி முதல் மூடப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவிப்பு.

திருச்சியின் பல்வேறு அடையாளங்களுள் காவிரி பாலமும் ஒன்றாக திகழ்கிறது. இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோன்றி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், ஸ்ரீரங்கம் காவிரிப் பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015 நவம்பரில் ரூ.1.35 கோடி, 2018 மார்ச்சில் ரூ.35 லட்சம், 2018 செப்டம்பரில் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக் குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. எனவே பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து சீரமைப்பு பணிகளுக்காக அரசு ரூ.6.87 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில் வருகிற 10-ந்தேதி இரவு முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மாதமே இந்த பாலத்தை சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீர் வரத்து அதிகரித்தது. எனவேதான் இந்தப்பணி அப்போது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
திருச்சி: பராமரிப்பு பணிக்காக இம்மாதம் 10-ஆம் தேதி முதல், காவிரி பாலம் மூடல்..

மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவேரி பாலத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவுள்ளதையொட்டி, இப்பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆகுமானதால், காவேரி பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை வருகின்ற10 தேதி சனி கிழமை இரவு 12 மணி முதல் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவேரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒயாமரி வழியாக ( காவிரி தென்கரை சாலை) பழைய பாலத்தின் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணம்தான் சாலை ( காவிரி இடது கரைச்சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏரி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து இடது புறம் உள்ள திருவானைக்காவல் கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவணக்காவல் கோவில் வந்துடைந்து வலது புறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணம் தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை ( சென்னை -திருச்சி திண்டுக்கல் -சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலது புறம் திரும்பி ஒயாமரி வழியாக (காவிரி தென்கரைச் சாலை) அண்ணா சிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சி: பராமரிப்பு பணிக்காக இம்மாதம் 10-ஆம் தேதி முதல், காவிரி பாலம் மூடல்..

மேலும் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தை தவிர்த்து புறவழிச் சாலை வழியாக சஞ்சீவி  நகர், மார்க்கமாக காவேரி புது பாலம் வழியாக நம்பர் 1  டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையில் இருந்து திருச்சி வரும் வாகனங்கள் நம்பர் 1 டோல்கேட் அடைந்து காவேரி புது பாலம் வழியாக வந்து புரவலச் சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக காவேரிபாளையத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஒயாமரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவேரி பழைய பாலத்தில் சென்று நேராக நம்பர் 1  டோல்கேட் சென்று செல்லலாம்.  காவேரி பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதை ஒட்டி மேற்கண்ட மாற்று பாதையில் பயணம் செய்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget