மேலும் அறிய

உலகப் போரின் நிழல்... முடங்கும் திருச்சியின் ஐடி (IT) நிழல்!

வளைகுடா நாடுகளையும், அமெரிக்காவையும் நம்பியிருந்த திருச்சியின் உள்ளூர் ஐடி நிறுவனங்கள், சர்வதேசச் சூறாவளியில் சிக்கிய சிறு தோணிகளாய் தத்தளிக்கும் அவல நிலை

திருச்சி: எங்கோ மேற்கு ஆசியாவில் எரியும் போர்க் கணைகள், இதோ திருச்சியின் மன்னார்புரத்திலும், தில்லை நகரிலும் இருக்கும் கணினித் திரைகளை இருளடையச் செய்து கொண்டிருக்கின்றன.

புவிசார் அரசியல் பதற்றமும், எகிறிப் பாயும் அமெரிக்க டாலரின் மதிப்பும், திருச்சியில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் (ITES) வழங்கும் நடுத்தர நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு உலுக்கத் தொடங்கியுள்ளன.

வளைகுடா நாடுகளையும், அமெரிக்காவையும் நம்பியிருந்த திருச்சியின் உள்ளூர் ஐடி நிறுவனங்கள், சர்வதேசச் சூறாவளியில் சிக்கிய சிறு தோணிகளாய் தத்தளிக்கும் அவல நிலையை விவரிக்கிறது இந்தச் சிறப்புச் செய்தித் தொகுப்பு:

தள்ளிப்போகும் திட்டங்கள்... தடுமாறும் சம்பள பட்ஜெட்டுகள்!

திருச்சி மாநகரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக, இணையதள வடிவமைப்பு மற்றும் இ-காமர்ஸ் சேவைகளை வழங்கி வரும் நடுத்தர நிறுவனங்கள் பல உள்ளன. திருச்சி ஐடி அசோசியேஷன் (Trichy IT Association) பகிர்ந்துள்ள தகவல்கள், சர்வதேச நெருக்கடியின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இதுகுறித்து திருச்சியில் ஐடி நிறுவனம் தொடங்கியுள்ளவர்கள் தரப்பில் கூறுகையில், பணியாளர் செலவுகளைக் குறைக்கலாம் என்றுதான் திருச்சியில் இந்தியப் பிரிவைத் தொடங்கினோம். மார்ச் மாதத்தில் துபாயில் கையெழுத்தான பிரம்மாண்ட ஒப்பந்தம், போர்ச் சூழலால் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திறமையான பணியாளர்களை இழக்கக் கூடாது என்பதால், அவர்களைத் தற்காலிகமாக இந்தியத் திட்டங்களுக்கு மாற்றியுள்ளோம். இது எங்களின் நீண்ட காலச் சம்பள பட்ஜெட்டைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றனர்.

எகிறும் சர்வர் கட்டணம்... எங்கே போகும் லாபம்?

வெளிநாட்டு டிஜிட்டல் உள்கட்டமைப்புகளையும், சர்வர்களையும் நம்பியிருப்பது திருச்சி நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் கயிறாக மாறியுள்ளது.

₹50,000 கட்டணம் இன்று ₹1.5 லட்சம்!

டாலரின் மதிப்பு உயர்ந்ததால், முன்பு ₹50,000 ஆக இருந்த ஒரு சர்வரின் வாடகை, இன்று ₹1.5 லட்சமாக மும்மடங்கு உயர்ந்துள்ளதாகக் குமுறுகின்றனர் ஐ.டி. நிறுவனத்தினர்.

முதலீட்டுப் பற்றாக்குறை: உள்நாட்டிலேயே தரவு மையங்களை (Data Centers) உருவாக்கப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு தேவை. ஆனால், திருச்சி பிராந்தியத்தில் அந்த அளவிற்குப் பெரிய முதலீடுகளை ஆதரிக்கும் சூழல் இன்னும் உருவாகவில்லை.

முடங்கிய கட்டுமானமும்... போலி மென்பொருட்களின் ஆதிக்கமும்!

சர்வதேச அளவில் சிவில் இன்ஜினியரிங் சார்ந்த ஐடிஇஎஸ் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் இந்த நெருக்கடியிலிருந்து தப்பவில்லை.

வராத நிலுவைத் தொகைகள்: மேற்கு ஆசியாவில் பெரிய கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேண்டிய பணப் பட்டுவாடாக்கள் மிகக் கடுமையாகத் தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

விலை குறைப்புப் போட்டி:

சந்தையின் இந்த நெருக்கடியைத் தாங்க முடியாமல், சில நிறுவனங்கள் செலவைக் குறைக்கப் போலி மென்பொருட்களைப்  பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால், நேர்மையாக உரிமம் பெற்றுப் பயன்படுத்தும் நிறுவனங்கள், போட்டியைச் சமாளிக்கக் கடுமையான விலைக்குறைப்பைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

தொடரும் திறமை வாய்ந்த ஊழியர்களின் இடப்பெயர்வு!

சந்தையின் சவால்கள் ஒருபுறமிருக்க, உள்ளூர் மனிதவளப் பற்றாக்குறை திருச்சியின் ஐடி துறையை மற்றொருபுறம் வாட்டுகிறது.

திருச்சியில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஐடி பட்டதாரிகளை உருவாக்கினாலும், அவர்கள் அதிகச் சம்பளம் தேடி சென்னை, பெங்களூருக்கே ஓடுகிறார்கள். கல்லூரிகளில் புரோகிராமிங் மொழிகள் இருந்தாலும், மாணவர்களுக்குப் போதிய நடைமுறைப் பயிற்சி இல்லை. பேராசிரியர்களின் தகுதிகளும் தற்போதைய சந்தை மாற்றத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும்."

தொழில்முனைவோரின் அவசரக் கோரிக்கைகள்

சர்வதேசப் புயலில் சிக்கியுள்ள திருச்சியின் ஐடி துறையை மீட்டெடுக்க, உள்ளூர் தொழில்முனைவோர் அரசுக்கு இரு முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்:

அரசு கூட்டுப் பணி இடங்கள்:

ஆரம்பக்கட்ட மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உள்கட்டமைப்புச் செலவைக் குறைக்க, குறைந்த வாடகையில் அரசு சார்பில் நவீன கூட்டுப் பணி இடங்களை உருவாக்க வேண்டும்.

சிறப்புத் தொழில் தொகுப்புத் திட்டங்கள்:

உள்ளூர் வேலைவாய்ப்புகளையும், நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் பிரத்தியேக தொழில் தொகுப்புகளை ஏற்படுத்தி, மானிய விலையில் மென்பொருள் மற்றும் மின்சார வசதிகளை வழங்க வேண்டும்.

தொழில்முனைவோர் குமுறல்

உலகளாவிய சவால்கள் திருச்சியின் தொழில்நுட்பத் துறையில் ஒரு தற்காலிகத் தொய்வை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால், கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட இடைவெளியையும், உள்கட்டமைப்புக் குறைபாடுகளையும் அரசும் தனியாரும் இணைந்து சரிசெய்யாவிட்டால், திருச்சியின் ஐடி கனவு என்பது வெறும் தாள்களோடு மட்டுமே முடிந்துவிடும்!

Advertisement

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget