மேலும் அறிய

இறந்ததாக நினைத்த விவசாயி உயிர்பிழைத்த சம்பவம் - நடந்தது என்ன..?

வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உயிருடன் இருந்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60), விவசாயி. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 19 நாட்களாக பொன்னமரவாதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சண்முகம் திடீரென ஆபத்தான நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முரண்டாம்பட்டிக்கு கொண்டு வந்தனர். ஊரை நெருங்கிய போது மயங்கிய நிலையில் இருந்த சண்முகம் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடினர். மேலும் அவர்கள் ஆலம்பட்டி விலக்கு மற்றும் முரண்டாம்பட்டி விலக்கு உள்ளிட்ட மூன்று இடங்களில் மருத்துவமனையில் இறந்து கொண்டு வந்ததால் சாலையின் குறுக்கே வைக்கோல் மற்றும் பல்வேறு பொருட்கள் போட்டு எரித்து சடங்குகள் செய்து பின் முரண்டாம்பட்டியில் உள்ள அவரது வீட்டின் திண்ணையில் சண்முகத்தை வைத்தனர்.

இறந்ததாக நினைத்த விவசாயி உயிர்பிழைத்த சம்பவம் - நடந்தது என்ன..?

இதற்கிடையே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்த அவரது மகன் சுப்பிரமணியன் மாலையை கழற்றினார். பின்னர் தந்தைக்கு பால் ஊற்றினார். அப்போது திடீரென்று அருள் வந்த நிலையில், என் தந்தை சாகவில்லை, அவர் பிழைத்து விடுவார் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட அவரது உறவினர்கள் சுப்பிரமணியனை தேற்றினர். தந்தை இறந்த வேதனையிலும், அவர் மீதுள்ள பாசத்திலும் அவ்வாறு கூறியதாக நினைத்தனர். சிறிது நேரத்தில் சண்முகம் உடலில் இருந்து அசைவுகள் தென்பட்டன. இதனைக்கண்ட உறவினர் ஆச்சரியத்துடனும், பதட்டத்துடனும் அவரை பார்த்தனர். சிலர் அவரின் அருகே அமர்ந்து சத்தம் போட்டு கூப்பிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்த சண்முகம் பேசத்தொடங்கினார். உடல் நலமும் சீராகி இருந்தது. இறந்ததாக நினைத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உயிருடன் இருந்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget