மேலும் அறிய

பன்னீரா? பழனிசாமியா? - போஸ்டர் யுத்ததால் திருச்சியில் பரபரப்பு!

திருச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் 8 வது நாளாக தனித்தனியே மூத்த அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என்று ஓபன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் ,எடப்பாடி பழனிச்சாமி தான் வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றனர். போஸ்டர் யுத்தம் வெடித்த நிலையில் நேருக்கு நேராக வார்த்தை யுத்தங்களும் வெடித்துள்ளது.  இதனை தொடர்ந்து ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஓபிஎஸ் முற்றிலுமாக நிராகரித்து விட்டார்.

இரட்டை தலைமைதான் வேண்டும் என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களின் நிலைப்பாடு. அதிமுக கட்சியை பிளவுபடுத்த எடப்பாடி அணியினர் சதி செய்வதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் அசாதாரணமான சூழல் நிலவுவதால் அதிமுக பொதுக்குழுவை தள்ளி வைக்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் கடிதத்தை பார்க்கவேயில்லை என்று கூறும் இபிஎஸ் தரப்பினரோ திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூடும் என்று தெரிவித்துள்ளதோடு பொதுக்குழு எடுக்கும் முடிவை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஒத்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஒரு  நாள் மட்டுமே உள்ள நிலையில் மாறி மாறி ஆலோசனைகள் நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பன்னீரா? பழனிசாமியா? - போஸ்டர் யுத்ததால் திருச்சியில் பரபரப்பு!

இந்நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தலைமை ஏற்க வாருங்கள் என கூறி சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி ரயில் நிலையம் அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியில் அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கழகத்தின் ஒற்றை தலைமையே, கழகத்தை வழிநடத்த வாருங்கள் என ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக அவர்கள் ஒட்டிய சுவரொட்டியின் மிக அருகில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியில் 4 வருடம் சிறப்பான ஆட்சியை கொடுத்து சாமானிய மக்களிடம் எளிமையான முதல்-அமைச்சர் என பெயரெடுத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அன்போடு அரவணைத்து கட்சியை கட்டுப்பாட்டோடு வழிநடத்தும் எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகளால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையம் தனியார் மயமாகிறதா? 30–50 ஆண்டு குத்தகையா?
திருச்சி விமான நிலையம் தனியார் மயமாகிறதா? 30–50 ஆண்டு குத்தகையா?
திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பாரத் மால்’! 3-வது அடித்தளப் பணி தொடக்கம் — என்னென்ன வசதிகள் தெரியுமா?
திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பாரத் மால்’! 3-வது அடித்தளப் பணி தொடக்கம் — என்னென்ன வசதிகள் தெரியுமா?
மண்ணச்சநல்லூர் அருகே குரங்குகள் அட்டகாசம்: ஊரை விட்டே வெளியேற கிராம மக்கள் முடிவு
மண்ணச்சநல்லூர் அருகே குரங்குகள் அட்டகாசம்: ஊரை விட்டே வெளியேற கிராம மக்கள் முடிவு
திருச்சியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே புறப்படுங்க நண்பர்களே
திருச்சியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே புறப்படுங்க நண்பர்களே

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Cooking Gas Scheme : ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Budget EMI Cars: ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்
ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்
Gold and silver rate today : மீண்டும் மீண்டுமா.!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை என்ன.?
மீண்டும் மீண்டுமா.!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை என்ன.?
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
Embed widget