மேலும் அறிய

பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணத்தை தொடங்குகிறார். இதன் முனேற்ப்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் இருந்து வருகிற செப்டம்பர் 7-ந்தேதி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி வெற்றி பயணத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி. மற்றும் பலர் பங்கேற்றனர். இதையடுத்து கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது... 

"காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணத்தை தொடங்குகிறார். குமரியில் காந்தி, காமராஜர் நினைவு மண்டபத்திற்கு வணக்கம் செலுத்தி விட்டு தொடங்கும் இந்த பயணம் 150 நாட்கள் கடந்து காஷ்மீர் வரை சென்றடைகிறது. இந்தியாவின் ஒற்றுமைக்கு மக்களிடையே இருக்கும் நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக அவர் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் நலிவடைந்து இருக்கிறது. மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்த நிலை வந்து விட்டது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி குறைந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் குறைந்துவிட்டது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபம் தருவேன் என்று கூறினார். ஆனால் விவசாயம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது.

பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது - கே.எஸ்.அழகிரி

கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார். ஆனால் தரவில்லை. கல்வியில் முன்னேற்றம் இல்லை. எந்த மாமிசத்தை உண்ணவேண்டும், எதை சாப்பிட வேண்டும் என்பதை அரசு கட்டுப்படுத்துகிறது. மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக உ.பி.யில் அடித்துக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் தகர்த்து எறிவதற்காகவே எங்கள் தலைவர் நடைபயணம் தொடங்குகிறார். நாட்டில் அரிசியையும், கோதுமையும் தான் ஏழைகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளார்கள். ஆனால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறுகிறார். சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சியில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். இன்று நாடு வளர்ந்துள்ளதா என்பது தான் முக்கியம். இன்றைய சூழலில் நம் பொருளாதார நிலை என்ன? மன்மோகன் சிங் ஆட்சியில் 9.2 சதவீதம் ஜி.டி.பி. உயர்ந்தது. ஆனால் இன்று வெறும் 7 சதவீதம் தான் உயர்ந்துள்ளதாக கணக்கு காண்பிக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்று வருகிறார்கள்.

பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்களும் முக்கியம், தனியார் துறையும் முக்கியம். கலப்பு பொருளாதாரம் தான் நாட்டை உயர்த்தும். பா.ஜ.க. ஆட்சியில் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே செல்லும் போது விஷத்தை கக்கி விட்டு தான் செல்வார்கள். அது போல குலாம்நபி ஆசாத்தும் பேசி உள்ளார். கட்சியில் முக்கிய பதவிகள் வகித்த அவர் கட்சியை குறித்து பேசாமல் இருப்பது தான் நல்லது. மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாமலேயே காங்கிரசை வழிநடத்தினார். அதுபோல ராகுல் காந்தியும் தேவைப்பட்டால் வருவார். தலைவர் தேர்தலுக்கும், செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கும் நடைபயணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பங்கேற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தவர்கள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தில் ஒரு இயக்கம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் தான் ஆரோக்கியமான ஜனநாயகம். மாற்றங்கள் நிறைந்தது தான் ஜனநாயகம். இன்று காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. மீண்டும் நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. சிறப்பாக ஆட்சி நடத்துகிறது. ஒரு அரசால் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்கிறார்கள். ஆங்காங்கே இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டினால் அதை சரி செய்து கொள்கிறார்கள். மோடியின் விவசாய காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதி விவசாயிகள் மட்டுமே செல்வாக்கு உள்ள விவசாயிகள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். எனவே விவசாய காப்பீட்டு திட்டம் என்பது தோல்வி தான். சென்னையில் எங்கு விமான நிலையம் வர வேண்டியது என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசு தான். விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் போது குறைந்தபட்சம் 20 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். 

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget