மேலும் அறிய

TN 10th Result 2022: திருச்சியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.25 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.25 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி தமிழகத்தில்  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  கடந்த மே மாதம் 30-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.55 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர். அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

TN 10th Result 2022: திருச்சியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.25 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் 5 மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஒரு நகராட்சி பள்ளி உள்பட 192 அரசு பள்ளிகளும், 55 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 41 பள்ளிகளும், 135 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 27 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளிகள் மூன்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு பள்ளியும் என மொத்தம் 455 உயர்நிலை பள்ளிகள் உள்ளன. இதில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் 17ஆயிரத்து 713 மாணவர்களும், 17 ஆயிரத்து 540 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 253 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள். கடந்த கல்வி ஆண்டில் (2020-21) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையின் காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய கல்வி ஆண்டில் (2019-20) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதன்  காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய 2018-19 ஆம் கல்வி ஆண்டில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 96.45% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TN 10th Result 2022: திருச்சியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.25 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி

இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.25% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 87.64%, மாணவிகள் 96.78% தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்துவரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 90.05 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget