மேலும் அறிய

மலை, அருவி, சூப்பர் கிளைமேட்...! - புத்துணர்ச்சி தரும் திருச்சி புளியஞ்சோலை...!

குடும்பத்துடன் சென்று இயற்கையின் அழகை ரசித்து, நீரில் நன்றாக ஆட்டம் போட்டு கொண்டாடுவதற்கு ஏற்ற இடமாகத் தான் இந்த புளியஞ்சோலை..

புளியஞ்சோலை தமிழகத்தின், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அதே இடத்தில் அடர்ந்த காடுகளில் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் துறையூர் அருகே அமைந்துள்ளது. வடமாவட்டங்களில் இருந்து வருவோர் சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து தம்மம்பட்டி வழியாக புளியஞ்சோலையை அடையலாம். கொல்லி மலையில் இருந்து வரும் மூலிகை கலந்த நீர் இங்கு உள்ள பாறைகளில் சலசலவென ஓடுகிறது. இது பார்ப்பதற்கே ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது. நீரின் சலசலப்பும், இயற்கையான சூழலும் நாம் ஒரு மலைப் பிரதேசத்திற்குள் இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குகிறது. மேலும் அங்கே விற்கப்படும் மலைத்தேன், பலா, அன்னாசி போன்ற பழங்களையும் வாங்கி சுவைத்துக்கொண்டு இங்கு நீரில் நன்றாக ஆட்டம் போடலாம். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் தங்களுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இங்கு வந்து பொழுதை கழிக்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற இடமாக இந்த புளியஞ்சோலை அமைந்துள்ளது. சுற்றி எங்கு பார்த்தாலும் இயற்கையினால் சூழப்பட்டுள்ளது.  


மலை, அருவி, சூப்பர் கிளைமேட்...! - புத்துணர்ச்சி தரும் திருச்சி புளியஞ்சோலை...!

கொரோனா ஊரடங்கு  காரணத்தினால், பல நாட்களாக எங்கும் செல்லாமல் தங்களது மகிழ்ச்சியை தொலைத்தவர்கள் இங்கு வந்து இந்த இயற்கையின் அழகு அம்சத்தை அனுபவிக்கலாம். அதுவும் நண்பர்களுடன் வரும்போது அது மறக்கமுடியாத அனுபவமாக அமையும். அதுமட்டுமன்றி இங்கு வாழும் மக்கள், காடுகளில் வளர்க்கும் பழங்களைச் சேகரித்து உள்ளூர் சந்தைகளில் அப்பழங்களை விற்கின்றனர். இங்கு, பல  வருடங்களுக்கு முந்தைய பாறைகள், குகைகள், கோயில்கள் என பல இருக்கின்றன. மேலும் இங்கிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் காட்டு வழியாக சென்றால் ஆகாய கங்கை அருவி, சித்தர்கள் வாழ்ந்த குகை, மற்றும் பழங்குடியினர் வாழ்விடம் போன்றவற்றையும் நாம் கண்டு களிக்கலாம். ஆகாய கங்கை எனப்படும் மலை உச்சியில் வேறு சில நதிகளும் உருவாகின்றன. கொல்லிமலையில் பார்க்கவேண்டிய இடங்களில் முக்கியமான இடம் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியும் ஒன்று. ஆனால் இங்கு நாம் தனியாகவோ, அல்லது இருவரோ செல்வதைவிட குழுவாக நிறைய பேர் செல்வதே பாதுகாப்பானது.


மலை, அருவி, சூப்பர் கிளைமேட்...! - புத்துணர்ச்சி தரும் திருச்சி புளியஞ்சோலை...!

திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுற்றுலா தலங்களில் முதன்மையாக இருக்கக்கூடியது, புளியஞ்சோலை சுற்றுலா தளம் என்கிறார்கள் கல்லூரி மாணவர்கள். கல்லூரி நாட்கள் தவிர விடுமுறை என்றாலே நண்பர்களுடன் உடனே  புறப்பட்டு புளியஞ்சோலை சென்று விடுவோம், காலை முதல் மாலை வரை முழுவதுமாக அருவிகளில் குளியல், மழை காடுகளில் விளைந்த பழங்கள் உணவாக எடுத்துக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு அன்றைய பொழுதை போக்குவோம் என்று கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான புளியஞ்சோலை குடும்பத்துடன் சென்று அன்றைய பொழுதைக் கழிப்பதும், அருவிகளில் குளிப்பது குழந்தைகள் விளையாடுவதை மகிழ்ச்சியாக அன்றைய பொழுதைக் கழிப்போம் என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் என குடும்பத்துடன் அன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு புளியஞ்சோலை தான் முதன்மையான இடம் என்று தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று இயற்கையின் அழகை ரசித்து, நீரில் நன்றாக ஆட்டம் போட்டு கொண்டாடுவதற்கு ஏற்ற இடமாகத் தான் இந்த புளியஞ்சோலை அமைந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள்... காவல்துறையினர் எடுத்த அதிரடி: போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?
திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள்... காவல்துறையினர் எடுத்த அதிரடி: போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?
திருச்சி ரயில்வே வளாகங்களில் பசுமைப் புரட்சி! 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட தெற்கு ரயில்வே – பிஏபிடி மெகா திட்டம்!
திருச்சி ரயில்வே வளாகங்களில் பசுமைப் புரட்சி! 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட தெற்கு ரயில்வே – பிஏபிடி மெகா திட்டம்!
Trichy Power Cut: திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget