மேலும் அறிய
புதுக்கோட்டை: வாலிபர் இறப்புக்கு காரணமான போலீசாரை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
வடகாட்டில் வாலிபர் இறப்பிற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த தம்பதி கந்தசாமி-ராஜேஸ்வரி. இவர்களது மகன் ரமேஷ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர், சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரமேஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் ரமேசின் உடலை சொந்த ஊருக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் சாலையில் ரமேசின் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வடகாடு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இறந்த ரமேசுக்கு 8-ம் நாள் சடங்குக்காக அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானோர் நேற்று வந்தனர். வழக்கமாக, இந்த பகுதியில் துக்க நிகழ்ச்சியில் ஆண்கள் மேலாடையின்றி கலந்து கொள்வது வழக்கம். 8-ம் நாள் அஞ்சலிக்கு வந்த உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்காத போலீசாரை கண்டித்தும், ரமேசின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வடகாட்டில் ரமேசின் வீட்டின் அருகே பட்டுக்கோட்டை-பேராவூரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஆண்கள் மேலாடையின்றி கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், வடகாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், போலீசார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அரசிடம் இருந்து கூடுதல் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை-பேராவூரணி சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
சென்னை
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion