மேலும் அறிய

வேங்கைவயல் வழக்கு விசாரணையில் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனைக்கு கோர்ட் அனுமதி

வேங்கைவயல் வழக்கு விசாரணை தொடர்பாக மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த புதுக்கோட்டை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலிஸ் அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு கூறியது. மேலும்  தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அறிவியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், வழக்கு தொடர்பாக 140-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர்களில் 119 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 11 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைக்கு கோர்ட்டு மூலம் அனுமதி கிடைத்தது. இதில் ஆயுதப்படை போலீஸ்காரர் முரளி ராஜா உள்பட 3 பேரிடம் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடைபெற்றது. 
 
வேங்கைவயல் வழக்கு விசாரணையில் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனைக்கு கோர்ட் அனுமதி
 
இந்த நிலையில் 3 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு புதுக்கோட்டை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 11 பேரில் 8 பேர் வராத நிலையில், அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கின் விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டனர். இதில் மேலும் 10 பேரின் பெயர் பட்டியலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொள்ள உள்ளனர். மேலும் 10 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
Stalin Condemns: “தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
“தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Top 10 News Headlines: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
Stalin Condemns: “தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
“தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Top 10 News Headlines: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Tamilnadu Roundup: ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
Loksabha Attendance: மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Embed widget