மேலும் அறிய

திருச்சி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வாக்குச்சாவடி இடமாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு 2023-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. அதற்காக முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிபட்டியல்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வைத்தியநாதன், தேர்தல் தாசில்தார் முத்துசாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

திருச்சி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு: மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,83,298 பேர், வாக்குச்சாவடி எண்ணிக்கை 324, ஸ்ரீரங்கம் மொத்த வாக்காளர்கள் 3,06,691 பேர், வாக்குச்சாவடி 339, திருச்சி மேற்கு மொத்த வாக்காளர்கள் 2,66,706 பேர், வாக்குச்சாவடி 270, திருச்சி கிழக்கு மொத்த வாக்காளர்கள் 2,51,347 பேர், வாக்குச்சாவடி 255, திருவெறும்பூர் மொத்த வாக்காளர்கள் 2,94,409 பேர், வாக்குச்சாவடி 296, லால்குடி மொத்த வாக்காளர்கள் 2,16,899 பேர், வாக்குச்சாவடி 249, மண்ணச்சநல்லூர் மொத்த வாக்காளர்கள் 2,45,121 பேர், வாக்குச்சாவடி 273, முசிறி மொத்த வாக்காளர்கள் 2,28,081 பேர், வாக்குச்சாவடி 260, துறையூர் (தனி) தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,22,749 பேர், வாக்குச்சாவடி 277 ஆகும். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 23,15,301 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களுக்காக 2,543 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

இந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குச்சாவடி இட மாற்றம், பெயர் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் மாவட்டத்தில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 12 வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்தல் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அவற்றை வருகிற 7-ந் தேதி முதல் 14-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் (தாலுகா அலுவலகம்), வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் (ஆர்.டி.ஓ. அலுவலகம்) மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக கோரிக்கைகள் அளிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பொதுமக்கள், குடியிருப்பு சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பிற வழிகளில் வரப்பெறும் மனுக்களை பரிசீலனை செய்து இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியல் வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget