மேலும் அறிய

சிவனே போற்றி... கோலாகலமாக நடந்த ஜம்புகேஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்

பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவானைக்காவல் அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் திருச்சி மாநகரில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-ஆவது சிவத்தலமாகும். மேலும் சுமார் 2500 வருட மிகவும் பழமையான இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனையும் இறைவியையும் வணங்கி வழிபடத் திருமணத் தடைகள் நீங்கும், சகல தோஷங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை உண்டு. இத்தகைய புகழ்பெற்ற பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

சிவனே போற்றி...  கோலாகலமாக நடந்த ஜம்புகேஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்

அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 1 ஆம் தேதி  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 7 மணி அளவில் சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் காலை 7.25 மணி அளவில் கும்ப லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் 18-ந் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடு, 19-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனம், 20-ந்தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

சிவனே போற்றி...  கோலாகலமாக நடந்த ஜம்புகேஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்

மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகரலக்னத்தில் அதிகாலை 3.45 மணிக்குள் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளுனினர். முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேர் காலை 5.30 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணகான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். பின் பு மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய தேரோடும் நான்கு பிரகாரங்களில் சுற்றிவரும் தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது. பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார். மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடைந்தது. பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர். மேலும் பாதுக்காபு பணியில் 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget