மேலும் அறிய

அரியலூரில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு

அரியலூர் மாவட்டத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற முருகன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிசென்ற மர்மநபர்களுக்கு காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்

அரியலூர் மாவட்டம்  தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில்  பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான கோவிலான இங்கு பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த மாதம் 18ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்  நேற்று  மாலை மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் கோவில் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.  மீண்டும் கோவில் வளாகத்தை தூய்மை படுத்துவதற்காக  வந்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவிலின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கேட் ஒன்று திறந்து இருந்தது கண்டு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் கருவறைக்கு முன் பக்கத்தில் இருந்த உண்டியலை காணாததால் மேலும் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகிகள் சுற்றுப்புறங்களில் தேடிப்பார்த்தனர்.  ஆனால் உண்டியலை எங்கு தேடியும் கிடைக்காததால் உண்டியல் திருடுபோய் இருப்பது தெரிய வந்தது.
 
அரியலூரில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு
 
பின்னர் இதுகுறித்து  காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்த கிராம மக்கள் சுற்றுவட்டாரத்தில் உண்டியலை தேடிப்பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் பழைய பொன்னாற்றங்கரையில் உண்டியல் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே இருந்த பணத்தை மட்டும் மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு சில்லறைகளை அதிலேயே விட்டு விட்டு சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு  மோப்ப நாய் டிக்ஸி  வரவழைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதியில் பலத்த மழை பெய்து இருந்ததால் மோப்பநாயால் செயல்பட முடியவில்லை. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து பக்தர்களின் வருகை இருந்து வந்த கோவில் என்பதால் உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறையினர்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
 
அரியலூரில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு
 
மேலும் கடந்த ஒரு மாதமாக அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டில் யாரும் இல்லாமல் இருக்கும் போது பின் கதவை உடைத்து திருடுவது, தண்ணீர் கெட்பதுபோல் நகையை திருடுவது, வழிபறி போன்ற குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுக்காகவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் சிசிடிவி கேமராகளை உடனடியாக அனைத்து பகுதிகளிலும் பொருந்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
OPS STATEMENT: மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
OPS STATEMENT: மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
Embed widget