PM Modi Visits Trichy : பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு
இந்திய பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு வருகை புரிவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி, நாளை 20.01.2024 திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு வருகை புரிவதை முன்னிட்டு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று 19.01.2024-ந்தேதி இரவு 08. 00 மணியிலிருந்து அனைத்து கனரக வாகங்களையும் கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.
மேலும், நாளை 20.01.2024-ந்தேதி காலை 06. 00 மணியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர தேவை வாகனங்களை தவிர, அனைத்து வாகனங்களையும், கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல் நோக்கி செல்லும், அனைத்து வாகனங்களும் பெரம்பலுார் மாவட்டம் தண்ணீர்பந்தல் சந்திப்பிலிருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்லவேண்டும்.
சென்னையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் நோக்கி செல்லும், அனைத்து வாகங்களும் பெரம்பலுார் மாவட்டம் தண்ணீர்பந்தல் சந்திப்பிலிருந்து குன்னம், அரியலூர், கீழப்பழுர், திருவையாறு, தஞ்சாவூர், வல்லம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக செல்லவேண்டும்.
நாகை மற்றும் திருவாரூர் மற்றும் தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக சென்னை மற்றும் கரூர் மற்றும் கோவை நோக்கி செல்லும் வாகனங்களை, தஞ்சாவூர், கீழப்பழுர், அரியலுார், குன்னம், பெரம்பலுார் வழியாக செல்லவேண்டும்.
நாகை மற்றும் திருவாரூர் மற்றும் தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக மதுரை மற்றும் திண்டுக்கல் நோக்கி செல்லும் வாகனங்கள், வல்லம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக செல்லவேண்டும்.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை நோக்கி செல்லும் வாகனங்களை புதுக்கோட்டை கட்டியாவயலிலிருந்து இலுப்பூர், விராலிமலை, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார் வழியாக செல்லவேண்டும்.
மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், துவங்குறிச்சி அரசு மருத்துவமனை சந்திப்பிலிருந்து புத்தாநத்தம், மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார் வழியாக செல்லவேண்டும்.
திண்டுக்கல்லிலிருந்து திருச்சி வழியாக சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், மணப்பாறை ஆண்டவர் கோவில், குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார் வழியாக செல்லவேண்டும்.
கரூரிலிருந்து திருச்சி வழியாக சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், குளித்தலை சுங்ககேட்டிலிருந்து, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
அரியலுாரிலிருந்து திருச்சி வழியாக, சேலம் மற்றும் கரூர், கோவை செல்லும் வாகனங்கள், கல்லக்குடி, புள்ளம்பாடி, சிதம்பரம் புதிய பைபாஸ் ரோடு, கொள்ளிடம் "Y" ரோடு, நொச்சியம், குணசீலம், முசிறி, குளித்தலை வழியாக செல்லவேண்டும்.
தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக மதுரை செல்லும் வாகனங்கள், துவாக்குடி சுங்கச்சாவடி, துவாக்குடி அரைவட்ட சாலை வழியாக கும்பக்குடி சந்திப்பு, பஞ்சப்பூர் சந்திப்பு மற்றும் விராலிமலை வழியாக செல்லவேண்டும்.
பிரதமர் மோடி திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து, மீண்டும் இங்கிருந்து புறப்படும் வரை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.