மேலும் அறிய

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கலை தடுக்க புகார் எண் அறிமுகம்

தொலைபேசி எண் மூலம் தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று அந்தந்த மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்களை நியமித்துள்ளது. ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக  உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் இந்த ரேஷன் கடைகள் கூட்டுறவு தொடக்க வேளாண் சங்கங்கள் மூலம் நடத்தப்படுகிறது. கூட்டுறவு மற்றும் மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இ்ந்தநிலையில் சமீப காலமாக மத்திய அரசு பொது வினியோகத்திற்கான ரேஷன் கோதுமை அளவை வெகுவாக குறைத்து விட்ட நிலையில் ரேஷன் கடைகளில் 20 சதவீத ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூட கோதுமை வினியோகம் செய்யப்படாத நிலை நீடிக்கிறது. மேலும் வினியோகிக்கப்படும் அரிசியின் தரத்திலும் அவ்வப்போது பிரச்சினைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கலை தடுக்க புகார் எண் அறிமுகம்

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் ரேஷன் வினியோக முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும் ரேஷன் அரிசி வினியோக மையங்களிலிருந்து கடத்தப்படுவது தொடர்கிறது. கண்காணிப்பு அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசி சேகரிக்கப்பட்டு கடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் மொத்தமாக வினியோக மையங்களில் இருந்து கடத்தப்படுவது தான் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு வழிவகுக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் நிலை உள்ளது. வினியோக மையங்களை முறையாக கண்காணித்தால் கடத்தப்படுவது வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி ஆயினும் பொதுமக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்களை வினியோகிக்கும் நிலையில் அதனை முறைகேடாக கடத்தி அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்கும் நடைமுறையை தவிர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கலை தடுக்க புகார் எண் அறிமுகம்

இந்நிலையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களிடையே ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் சுவரொட்டிகளை பொதுமக்கள் பார்வையில் படும் பகுதிகளான பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தம், ரேஷன் கடைகள், ஊராட்சி மன்ற அலுவலகம், சுங்கச்சாவடி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கல் சம்பந்தமான புகார் மற்றும் தகவல் தெரிவிக்க பொதுமக்கள் உடனடியாக 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று அந்தந்த மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget