மேலும் அறிய

பெரம்பலூர் மாவட்டத்தில் 35 ஏரிகள் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த பலத்தமழை காரணமாக 35 ஏரிகளில் தண்ணீர் நிரம்பியது. பொதுமக்கள் ,மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சிறிது நாட்களிலேயே லாடபுரம் பெரிய ஏரியும், லாடபுரம் கீழேரியும் நிரம்பின. பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பின. அதனைத்தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டு கடந்த 13-ந்தேதி கன மழை பெய்தது. பெரம்பலூரில் 2 மணிநேரம் மழை கொட்டியது. அதனைத்தொடர்ந்து இரவு வரையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது. தொடர்மழையின் காரணமாக லாடபுரம் ஏரிகள், குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி, பெரம்பலூர் பெரியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை மீண்டும் நிரம்பின. பெரம்பலூரில் உள்ள திரவுபதி குளம் என்றழைக்கப்படும் தெப்பக்குளம் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பியது. மழை நீரும், காட்டாற்று ஓடைகளின் ஊற்றுநீரும் ஏரி, மதகுகளின் வழியே வழிந்தோடுவது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. பெரம்பலூர் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை பிரதான மதகில் நீர் வழிந்தோடியது. இதையடுத்து, பெரிய ஏரி ஆயக்கட்டு பகுதி விவசாயிகள், மதனகோபாலசுவாமி கோவில் பணியாளர்கள் பெரிய ஏரியில் நீர்நிலைக்கு தேங்காய் உடைத்தும் நிவேதனம் செய்தும் வழிபட்டனர். பின்னர் பூக்களை தூவி புதுவெள்ளநீரை வரவேற்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 35 ஏரிகள் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மேலும் பெரிய ஏரியில் கடை வழிந்தோடிய மழைநீரில் மீன்கள் அதிகம் தென்பட்டதால், மீன்பிடிப்பவர்கள் வலைகளை விரித்து மீன்களை பிடித்து சென்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் கூட்டம் கூட்டமாக வந்து பெரிய ஏரியில் நீர்வழிந்தோடியதை கண்டு ரசித்தனர். இதேபோல் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் உபரிநீர் வாய்க்காலிலும், துறைமங்கலம் பெரிய ஏரி வழிந்தோடும் மதகு பகுதியிலும் இளைஞர்கள் ஆர்வமுடன் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் டவுனில் பெய்த பலத்த மழை காரணமாகவும், பெரம்பலூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தோடி வருவதாலும், பெரம்பலூரில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை நிரம்பின. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் பராமரிக்கப்படும் ஏரிகள் மொத்தம் 73 உள்ளன. இவற்றில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. பென்னகோணம், வெங்கலம், பேரையூர் ஆகிய ஏரிகள் 80 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன. செங்குணம், அன்னமங்கலம், நாரணமங்கலம், காரை பெரியஏரி, சின்னாறு போன்ற ஏரிகள் 50 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் நிரம்பி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOSSuriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Vijay Sethupathi :  நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
Embed widget