மேலும் அறிய

திருச்சி மத்திய சிறை கைதிகளுக்கு புதிய திட்டம் - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09 கோடி செலவில் பெட்ரோல் பங்க்-ஐ சிறைக்கைதிகள் நடத்த ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைவாசிகள் உடல் அளவிலும், மனதளவிலும் அதிகளவில் சோர்வு அடைந்திடாதபடி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு விதமான வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக மன உளைச்சல் இல்லாதபடி அவர்களுடைய சிந்தனைகளை நல்வழிப்படுத்தி, ஒரு புதிய மனிதராக உருவாக்கி அவர்களை இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும், என்பதற்காக சிறைத்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிறை கைதிகளுக்கு தங்களுடைய தவறான சிந்தனை இருந்து விடுபட புத்தகம் வாசிக்க செய்வது, கல்வியை கற்றுத் தருவது, நன்மை, தீமை என எடுத்துரைப்பது. சுயதொழில் கற்றுத் தருவது, விவசாயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி கைதிகளுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் குற்ற நடவடிக்கைகளை தொடராத அளவிற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து கைத்தொழில்கள் கற்றுக்கொடுத்து அவர்களை மேம்படுத்தி வருகிறது.

திருச்சி மத்திய சிறை கைதிகளுக்கு புதிய திட்டம் - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

சிறை கைதிகளுக்கு புதிய திட்டம்

இதனை தொடர்ந்து, தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் தன்னுடைய பங்களிப்பாக சிறைவாசிகளுக்கான தொழில்களை மேம்படுத்திடவும், அவர்களும் இந்த சமுதாயத்தில் சாதாரண மனிதர்களை போல வாழவும் வழிவகை ஏற்படுத்திடும்படி பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகளை சிறை வாசிகளுக்காக ஆரம்பித்துள்ளனர். அதில் ஏற்கனவே திருச்சி பெண்கள் மத்திய சிறையில் ஒரு பெட்ரோல் பங்க் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  அண்மையில் திருச்சி ஆண்கள் மத்திய சிறை வளாகம் அருகே புதிய பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திருச்சி மேலாளர் கென்னடி கூறுகையில், ”சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறை வளாக நுழைவாயில் அருகே உள்ள 2800 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தில் பெட்ரோல் பங்க் கட்டுமானங்களுக்கு சுமார் 300 சதுரஅடி பயன்படுத்தப்பட உள்ளது. சுமார் 1.9 கோடி நிதி ஒருக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 20 ஆயிரம் லிட்டர் டீசல் கொள்ளளவு உள்ள டேங்க்குகள் வைக்கப்பட உள்ளது.

திருச்சி மத்திய சிறை கைதிகளுக்கு புதிய திட்டம் - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

கைதிகளின் வாழ்க்கையை மாற்றும் திட்டம்

மேலும் இந்த இடத்தில் எதிர்காலத்தில் சிஎன்ஜி கேஸ் மையம் அமைப்பதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. கட்டுமானங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த வருட இறுதியில் கட்டுமான பணிகள் நிறைவுற்று அடுத்த ஆண்டு இந்த பெட்ரோல் பங்க் செயல்பாட்டிற்கு வரும்” என்று தெரிவித்தார். மேலும், “இதில் சிறைவாசிகள் எப்படி பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறித்து நாம் சிறை அதிகாரிகளிடம் விசாரித்ததில் சிறைவாசிகள் 3 வேளை பணி சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் சிறையில் இருக்கக்கூடிய கைதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கும் . ஏனென்றால் பெட்ரோல் பங்கிற்கு பொதுமக்களுடைய வருகை தொடர்ந்து இருக்கும், அதே சமயம் கைதிகளின் தனது தங்களது மன உளைச்சலில் இருந்து மீண்டு இந்த சமுதாயத்தில் ஒரு புதிய மனிதராக உருவாகக்கூடிய ஒரு வாய்ப்பு இந்தத் திட்டம் ஏற்படுத்தித் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்தார்.

மேலும், பூமி பூஜையில் திருச்சி மண்டல சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, திருச்சி சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி, இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் கென்னடி உள்ளிட்ட சிறை அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
‘’விடியா திமுக அரசே.. மக்கள் உயிரோடு விளையாடுவதா?’’- ஈபிஎஸ் கடும் சாடல்!
‘’விடியா திமுக அரசே.. மக்கள் உயிரோடு விளையாடுவதா?’’- ஈபிஎஸ் கடும் சாடல்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
Embed widget