மேலும் அறிய

திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; வழங்கிய அமைச்சர்கள்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட உதவிகளை வழங்கினார்கள்.

திருச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் சார்பில் ரூபாய் 65.03 கோடி மதிப்பீட்டில் 96 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வேளாண்மை பொறியில் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூபாய் 5.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 புதிய கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தார்கள். தொடர்ந்து, திருச்சி 4,404 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அதில் தற்போதுள்ள 281.14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் உள்ள உள்ளுர் திட்டப் பகுதியினை 804.55 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக விரிவாக்கம் செய்து, அதற்கான உத்தேச முழுமைத் திட்ட வரைவு திருச்சி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தால் தயார் செய்யப்பட்டு அரசால் இணக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் மீதான பொது மக்களின் ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை எளிதில் தெரிவிப்பதற்காக இணையதள முகவரி மற்றும் QR code -னை அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்தார்கள்.

திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; வழங்கிய அமைச்சர்கள்

மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியரின் அனைத்து துறை சார்ந்த திட்டங்களை விரிவாக ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் Dash Board இணையதளத்தை அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ரூபாய் 138 இலட்சம் மதிப்பீட்டில் 136 பயனாளிகளுக்கு இலவச வீட்மனை பட்டாக்களும் மற்றும் 2 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண நிதிக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூபாய் 24.78 இலட்சம் மதிப்பீட்டில் 14 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 7 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும், 5 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 2 பயனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலியும், 19 பயனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலியும், 1 பயனாளிக்கு திறன் கைப்பேசியும், 2 பயனாளிகளுக்கு காலிப்பரும். 15 பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களும், 19 பயனாளிகளுக்கு காதொலிக் கருவியும், 16 பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும், ஊரக புத்தாக்கத்துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூபாய் 44.12 இலட்சம் மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு இணை மானியத்திட்டத்தின் கீழ் நிதியுதவியும், 38 பயனாளிகளுக்கு நுண் நிறுவன கடனுதவிகளும் வழங்கப்பட்டது.

திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; வழங்கிய அமைச்சர்கள்

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ரூபாய் 2.45 இலட்சம் மதிப்பீட்டில் UYEGP திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு நிதியுதவிக்கான ஆணைகளையும், AABCS அண்ணல் அம்பேத்கார் வணிக சாம்பியன் திட்டத்தின் மற்றும் 1 பயனாளிக்கு தொழில் துவங்க நிதியுதவிக்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூபாய் 8.49 இலட்சம் மதிப்பீட்டில் 77 பயனாளிகளுக்கு முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 35 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 10 பயனாளிகளுக்கு பித்தளை தேய்ப்புப் பெட்டியும். கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூபாய் 104.02 இலட்சம் மதிப்பீட்டில் 106 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளும், 9 பயனாளிகளுக்கு சிறு தொழில் கடனுதவிகளுக்கான ஆணைகளும், 4 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைக்கான கடனுதவிகளும், 6 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக்கான கடனுதவிகளும், 1 பயனாளிக்கு பயிர்கடனுதவிக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவிகளும், 1 பயனாளிக்கு வீட்டு அடமானக் கடனுதவிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூபாய் 32.30 இலட்சம் மதிப்பீட்டில் 100 பயனாளிகளுக்கு பாசனத்திட்டத்தின் கீழ் நிதியுதவிக்கான ஆணைகளையும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டைகளையும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பீட்டில் 9 பயனாளிகளுக்கு மறுவாழ்வு நிதியுதவிகளையும் என மொத்தம் 7,128 பயனாளிகளுக்கு 20.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTV

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget