மேலும் அறிய

வாக்காளர் பட்டியலில் கவனம் வேணும்... நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் கே.என்.நேரு

வரும் செப்டம்பர் 17-ந் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

 

திருச்சி: பீகார் போல வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது என்று திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். 

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், கருணாநிதி, தொகுதி பொறுப்பாளர்கள் சந்திரசேகர், உத்ராபதி, செல்வம், பொருளாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், பகுதி செயலாளர்கள் இளங்கோ, கமல் முஸ்தபா, நாகராஜ் கனகராஜ், கவுன்சிலர்கள் நாகராஜன், கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மற்றும்  செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வரும் செப்டம்பர் 17-ந் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் அமைச்சர் கே என் நேரு பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் பார்வையாளர்களும் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக மீண்டும் தளபதி ஸ்டாலின் தான் வருவார் என சொல்லி இருக்கிறார்கள். ஒரு ஒன்றிய செயலாளர் முப்பதாயிரம் வாக்காளர்களை திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்க வேண்டும். ஒரு பகுதியில் உள்ள இந்து மைனாரிட்டி ஓட்டுக்களில், 200 ஓட்டுக்களை திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்க, அதே சமுகத்தை சேர்ந்த மூன்று நபர்களை ஒரு குழுவாக நியமிக்க வேண்டும் என தலைமையில் இருந்து உத்தரவு வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் அதிமுக- பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பொருந்தாத கூட்டணி என இதுவரை சொல்லி வந்திருக்கிறார்கள். புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் தனியாக நிற்பதாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தனியாக நிற்கிறார்களா? அல்லது கூட்டணி சேர்ந்து நிற்கிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எத்தனை குழுக்கள் அமைத்தாலும், வாக்குகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய செயலாளருக்கு உரியது. கடந்த 30 ஆண்டுகால எனது அரசியல் வாழ்வில் இதுவரை நான் எந்த ஒன்றிய செயலாளரையும் பதவியில் இருந்து நீக்கியது கிடையாது. ஒரு ஒன்றிய செயலாளருக்காக காவல்துறையில் சண்டை போட்டு மீண்டும் அவரை ஒன்றிய செயலாளராக்கி இருக்கிறேன். இதனை கவனத்தில் கொண்டு ஒன்றிய செயலாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இல்லை என்றால் நீங்களே சொல்லி விடுங்கள் வேறு ஆட்களை நியமித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் டெல்டா பகுதி, தளபதிக்கு நல்ல வாய்ப்புள்ள பகுதியாக இருக்கிறது. அறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு முறை கலைஞர் முதலமைச்சராக வந்துள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு, இரண்டாவது முறை தளபதியையும் முதல்வராக்க வேண்டும். அதற்கு நாம் எந்தவித சர்ச்சைகளுக்கும் சங்கடங்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒருமித்த கருத்தோடு உழைக்க வேண்டும்.

லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில், எந்தெந்த இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை சொல்ல போகிறோம். வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றமடைந்து அதனால் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியை செய்ய வேண்டும். பீகார் போல வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.,

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Manickam Tagore : ‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Embed widget