மேலும் அறிய

Lok Sabha Election 2024 : திருச்சியில் இருந்து 38 மாவட்டங்களுக்கு தபால் வாக்குகள் பிரித்து அனுப்பப்பட்டது

பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் இருந்து 38 மாவட்டங்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவை , காவல்துறை பாதுகாப்புடன் பிரித்து அனுப்பப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தரப்பில் தபால் வாக்குகள் செலுத்துவது குறித்து முறையான அறிவிப்புகள் மற்றும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நேரில் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க முடியாதவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தபால் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களில் செலுத்தினர். மேலும், மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்ட, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய பாராளுமன்ற தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு. இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிட பொதுவான சிறப்பு மையமாக திருச்சி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

Lok Sabha Election 2024 : திருச்சியில் இருந்து 38 மாவட்டங்களுக்கு தபால் வாக்குகள் பிரித்து அனுப்பப்பட்டது

38 மாவட்டங்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிட திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுவான சிறப்பு மையம் அமைத்திட உரிய ஏற்பாடுகள் திருச்சி கலையரங்கத்தில் செய்யப்பட்டது. இந்த மையத்தில் நேற்று  அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிடும் பணியினை  திருச்சி பாராளுமன்ற தொகுதி மாவட்ட ஆட்சியர் திருச்சி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் அஞ்சல் வாக்குகள் தொடர்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களால் அந்தந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள், தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரின் தொடர்புடைய அலுவலர்களிடம் பிரித்து வழங்கப்பட்டது. பின்னர் 38 மாவட்ட அலுவலர்களும் இந்த மையத்தில் பெற்றுக்கொண்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய காவல்துறை பாதுகாப்புடன் தங்களது மாவட்டத்திற்கு எடுத்து சென்றனர். இந்த மையத்திற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டது. இந்நிகழ்வில், அனைத்து மாவட்டத்திலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் தொடர்பு அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget