மேலும் அறிய

கேலோ இந்திய விளையாட்டு போட்டி: திருச்சி மாவட்ட ஆட்சியர், மேயர் சிலம்பம் சுற்றி அசத்தல்

திருச்சியில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் மஹாராஷ்டிரா அணி முதலிடமும், தமிழ்நாடு அணி இரண்டாம் இடமும் பிடித்தது.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த போட்டியானது சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.  திருச்சியில் கடந்த 21 ஆம் தேதி தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டிகள்  அண்ணா விளையாட்டு மைதான உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது.  அந்த போட்டியில் மல்லர் கம்பம் போட்டியில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து ஒரு மாநிலத்திற்கு 6 ஆண்கள், 6 பெண்கள் வீதமும், பீகார், அஸ்ஸாம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட 11 மாநிலங்களிலிருந்து மாநிலத்திற்கு 2 ஆண்கள், 2 பெண்கள் வீதமும் வீரர்கள் கலந்து கொண்டனர். மல்லர் கம்பம் விளையாட்டில் நிலைநிறுத்தப்பட்ட மல்லர் கம்பம், தொங்கவிடப்பட்ட மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. மேலும் கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தனி தனி போட்டி, ஆண்களுக்கான போட்டி, மகளிருக்கான போட்டி,  ஆண், பெண் கலப்பு போட்டி என நடத்தப்பட்டது.

 

 

மேலும், அனைத்து போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா அணி 209.25 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. 207.35 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், 205.30 மதிப்பெண்கள் பெற்று மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது அதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும்,  இரண்டாம் இடங்களை பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும்,  மூன்றாம் இடங்களில் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கங்களையும் வழங்கினர்.


கேலோ இந்திய விளையாட்டு போட்டி: திருச்சி மாவட்ட ஆட்சியர், மேயர் சிலம்பம் சுற்றி அசத்தல்

தொடர்ந்து மல்லர் கம்பம் விளையாட்டு நிறைவு விழாவையொட்டி 500 பேர் கலந்து கொண்ட சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோரும் சிலம்பம் சுற்றினர்

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Embed widget