மேலும் அறிய

பெரம்பலூர் : கூலித்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை

பெரம்பலூர் அருகே கூலித்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது

பெரம்பலூர் மாவட்டம் அருகே மருவத்தூர் காவல்துறை சரகம் கே.எறையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் (வயது55). இவர் தனது கரும்புத்தோட்டத்தில் 2007-ம் ஆண்டில் கரும்பு பயிரிட்டிருந்தார். விளைந்த கரும்பு பயிர்களை வெட்டுவதற்காக தனது நண்பர் தங்கராஜ் உதவியுடன் கள்ளக்குறிச்சியை அடுத்த க.அலம்பலம் பகுதியைச்சேர்ந்த சத்யா, அவரது கணவர் முருகேசன், உறவினர்கள் கலியன், மருவாயி, வெங்கடேசன் உள்பட விவசாய கூலித்தொழிலாளர்கள் சிலரை கே.எறையூர் கிராமத்திற்கு அழைத்து வந்து கரும்பு வெட்டுவதற்காக தங்கவைத்தனர். 
 
மேலும் அதற்காக முன்பணம் ரூ.50ஆயிரம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கரும்புகள் காய்ந்ததால் கரும்பு வெட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விவசாயி முருகேசனுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடாகி தகராறு ஏற்பட்டது.  இந்த நிலையில் விவசாயி முருகேசன் மற்றும் அவரது தரப்பைச்சேர்ந்த விஜயகோவிந்தராஜ் என்கிற விஜயகுமார் (40), குமார் (65) ஆகிய 3பேரும் சத்யா, அவரது கணவர் முருகேசன், சத்யாவின் உறவினர்கள் கலியன், மருவாயி, வெங்கசேன் உள்பட 13 பேரை குதிருக்குள் 2 வாரங்கள் அடைத்துவைத்து கொத்தடிமையாக நடத்தி  உள்ளனர்.
 
பெரம்பலூர் : கூலித்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை
 
மேலும் அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து சாதி பெயரை இழிவுபடுத்தும் விதமாக தகாதவார்த்தைகளால் திட்டி மிரட்டினர். இதில் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் தப்பிவந்து காவல்துறையிடம் நடந்ததை கூறினார். இதனை தொடர்ந்து சத்யா, கலியன் உள்பட13 கூலித்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து சத்யா, மருவத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அதன்பேரில் காவல்துறையினர் முருகேசன், விஜயகோவிந்தராஜ், குமார் ஆகிய 3பேர்மீதும் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். இந்த சம்பவத்தை அப்போது காவல்துறை துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள மனோகரன் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இருதரப்பிலும் விசாரணை செய்யப்பட்டு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி மலர்விழி, விவசாயி முருகேசனுக்கு 2 ஆண்டு சிறைதண்டணையும், ரூ.15ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்களுக்கு சிறைதண்டணை அனுபவிக்கவேண்டும் என்றும், விஜயகோவிந்தராஜ் மற்றும் குமார் இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைதண்டணையும், ரூ.5ஆயிரம் அபராதமும், இதனை கட்டதவறினால் மேலும் இருவரும் தலா 3 மாதங்களுக்கு சிறைதண்டனை அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
 
பெரம்பலூர் : கூலித்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை
 
இதனை தொடர்ந்து தொழிலாளர்களை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்குவது சட்டபடி குற்றம். வீட்டு வேலை, விவசாய வேலை, தொழில்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறுதிய குழந்தைகள் மற்றும் தொழில் தேடி வருபவர்களை மிரட்டி கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியதாக புகார்கல் வந்தால் உடனடியாக சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யாரும் இது போன்ற தவறான செயலில் ஈடுபட கூடாது என மக்களுக்கு அறிவுறைகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வழங்கினர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget