மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது26). இந்த தம்பதிக்கு வைஷ்ணவி (4) என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் ராஜலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரசவத்திற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் ராஜலட்சுமிக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் ராஜலட்சுமியின் கர்ப்பப்பையை அகற்றி உள்ளனர். பின்னர் ராஜலட்சுமியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ராஜலட்சுமியின் உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன் திரண்டனர். அவர்கள், ராஜலட்சுமிக்கு பிரசவத்தின்போது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறி மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக  உறவினர்கள் போராட்டம்
 
மேலும் இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட சுகாதாரத்துறை உதவி இயக்குனர் ராமு, ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, தாசில்தார் பாலகிருஷ்ணன், அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராஜலட்சுமிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது சிகிச்சை அளித்த டாக்டர் சாரதாவை கந்தர்வகோட்டைக்கும், செவிலியர் பரமேஸ்வரி, உதவி செவிலியர் முத்துலெட்சுமி ஆகியோரை புதுக்கோட்டை முத்துலெட்சுமி நினைவு மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக, சுகாதாரத்துறை உதவி இயக்குனர் ராமு தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget