மேலும் அறிய

கோவிந்தா! கோவிந்தா! கோஷங்களுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் ‘ரங்கா, கோவிந்தா’ என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி அல்லது ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில். இந்த கோவில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் என்ற ஊரில், காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் இந்தியாவிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோவிலாகவும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பெருமாள் கோவிலாகவும் விளங்குகிறது. சோழர், பாண்டியர், சேரர், விஜய நகர பேரரசர்கள் என பல மன்னர்களால் சீர் அமைக்கப்பட்ட பெருமை இந்த கோவிலுக்கு உண்டு. இந்திய கோவில்களிலேயே மிக உயரமான கோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் கோவில் தான். மேலும் வருடம் முழுவதும் திருவிழா நடப்பது லட்சக்கணக்கான பக்தர்கள் ஓரிடத்தில் ஒன்றுக்கூடுவதும் இக்கோயிலில் சிறப்பாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள், நாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேரடியாக வந்து தரிசனம் மேற்கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் குறிப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறக்கூடிய தேரோட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாத தேரோட்டம் இன்று அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. 

கோவிந்தா! கோவிந்தா! கோஷங்களுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!

கோவிந்தா கோவிந்தா தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழாவானது ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 28ம்தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. அதன் பின்னர் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்தார். இதனை தொடர்ந்து ஏழாம் திருநாளான இம்மாதம் 4ம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த அவர் தயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சம் கண்டருளிய அவர் மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார். எட்டாம் திருநாளான நேற்று அவர் தங்ககுதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்;பெருமாள் மேஷ லக்கனப்படி அதிகாலை 5.15 மணிக்கு திருதேரில் எழுந்தருளப் பண்ணினார். காலை 6.00. மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருதேரின் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு முக்கிய வீதிகளை திருத்தேர் வலம் வந்தது. ரெங்கா ரெங்கா என்று தரிசித்த பக்தர்களுக்கு திருத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் அருள்பாலித்தார். இந்த தேர் திருவிழாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோவிந்தா! கோவிந்தா! கோஷங்களுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!

திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் “அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவை ஒட்டி இன்று  உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ் உள்ளுர் விடுமுறையானது 2024 பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொருந்தாது.இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற 29.06.2024 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Embed widget