மேலும் அறிய

அமைச்சர் உதயநிதி காரை மறித்த விவசாயிகள் - திருச்சியில் நடந்தது என்ன..?

திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் திடீரென அமைச்சர் உதயநிதி காரை மறித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 
திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  32வது நாளான நேற்று எலும்பு துண்டுகளை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த வழியே  வந்த அமைச்சர் உதயநிதி காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 2016 - ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 


அமைச்சர் உதயநிதி காரை மறித்த விவசாயிகள் - திருச்சியில் நடந்தது என்ன..?

மேலும், கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறோம். குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1 க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும் என்றார்.
தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11, 1/2 லட்சம் கட்ட சொல்லி 1 தவனை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம். 

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது ,என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம். 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான  4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம்.


அமைச்சர் உதயநிதி காரை மறித்த விவசாயிகள் - திருச்சியில் நடந்தது என்ன..?

மேலும்  காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது..  திருச்சிக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறைத்து விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தினர். பின்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
Trichy Power Shutdown: நாளை திருச்சியில் மின் தடை! முக்கிய பகுதிகள் இதோ! மின்வாரியம் அறிவிப்பு
Trichy Power Shutdown: நாளை திருச்சியில் மின் தடை! முக்கிய பகுதிகள் இதோ! மின்வாரியம் அறிவிப்பு
Embed widget