மேலும் அறிய

காவிரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரிநீர்; விவசாயிகள் அரசுக்கு வைத்த கோரிக்கை

கடலில் கலக்கும் உபரிநீரை காவிரி, கொள்ளிடத்தில் நீருந்து நிலையம் அமைத்து குளங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 1.16 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு, மூன்று நாட்களில் நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது. கடந்த 1-ந்தேதி மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர பவானி, அமராவதி அணைகளும் நிரம்பியதால் பவானி, அமராவதி ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து காவிரியில் கலந்தது. இதனால் திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 150 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. அது அப்படியே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. பின்னர் கல்லணையில் இருந்து பாசன கால்வாய்களிலும், கொள்ளிடம் ஆற்றிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீரில் (தினமும் சராசரியாக வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர்) 80 சதவீதம் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.

காவிரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரிநீர்; விவசாயிகள் அரசுக்கு  வைத்த கோரிக்கை

மேலும் இயற்கையின் வரப்பிரசாதமாக காவிரி, பவானி, அமராவதி ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரை பயன்படுத்த முடியாமல் கடலில் கலப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக ஆற்றில் தடுப்பணைகள் கட்டி, நீருந்து நிலையம் அமைத்து அதன் மூலம் உபரிநீரை திருப்பி வறட்சி பகுதியில் பயன்படுத்தினால், நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பும். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் ஒருவர் கூறும் போது, காவிரியில் கர்நாடக அரசு அணைகள் கட்டி உள்ளதை போல் நம்மால் தமிழகத்தில் அணைகளை கட்ட வாய்ப்பு கிடையாது. அதே நேரம் தடுப்பணைகளை அதிகமாக கட்டலாம். அத்துடன், தடுப்பணை கட்டும் பகுதிகளில் ராட்சத நீர்உந்து நிலையங்களை அமைத்து அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு உபரிநீரை எடுத்துச்சென்று நிரப்பலாம். உதாரணமாக கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகில் உள்ள பெரியகுளம் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இதில் 0.60 டி.எம்.சி. (600 லட்சம் கனஅடி) தண்ணீர் நிரப்ப முடியும். இந்த குளம் நிரம்பினால் 50 கிலோமீட்டர் தொலைவிற்கு குடிநீர் ஆதாரமும், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டமும் உயரும். இப்போது காவிரியில் வீணாகச்செல்லும் தண்ணீரை, வெள்ளியணை பெரியகுளம் அருகிலேயே செல்லும் திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பதிக்கப்பட்டுள்ள இரண்டு ராட்சத குழாய்கள் மூலம் ஒருநாள் மட்டும் (24 மணி நேரம்) குளத்திற்கு தண்ணீரை முறையாக திருப்பிவிட்டு குளத்தை நிரப்பலாம். இப்பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், பொதுப்பணி துறையும் இணைந்து செயல்படுத்த வேண்டும். இதற்கு சில லட்சங்கள் தான் செலவாகும். இதை ஒரு முன்னோட்டமாக செயல்படுத்தலாம். 

காவிரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரிநீர்; விவசாயிகள் அரசுக்கு  வைத்த கோரிக்கை

மேலும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகளை கட்டலாம். இதில் மாயனூர் முதல் முக்கொம்புக்கு இடையே ஒரு தடுப்பணை, முக்கொம்பில் இருந்து கல்லணை இடையே ஒரு தடுப்பணை கட்டி அதில் இருபுறமும் தலா ஒரு நீருந்து நிலையம் அமைக்கலாம். இதுபோல் கொள்ளிடத்தில் அணைக்கரை (கீழணை) அருகே ஒரு நீருந்து நிலையம் அமைக்கலாம். இதன்மூலம் எப்போதெல்லாம். காவிரி, கொள்ளிடத்தில் உபரி நீர் வருகிறதோ, அப்போது இந்த நீருந்து நிலையத்தில் இருந்து அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் வறட்சியான பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு சென்று நிரப்ப முடியும். இதன் மூலம் நீர்நிலைகளை சுற்றி உள்ள அனைத்து பகுதியிலும் குடிநீர் ஆதாரமும், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டமும் உயரும். உபரி நீரை மட்டுமே கொண்டு செல்லும் வகையில், டெல்டா பாசன பகுதிகளுக்கு பாதிப்பு இன்றி இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே மேட்டூர் அணையில் இருந்து 100 குளங்களை நிரப்பும் வகையில் நீருந்து நிலையம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், அந்த பகுதியில் வறட்சி இருக்காது என தெரிவித்தார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget