மேலும் அறிய

Watch Video: டாஸ்மாக் தேடி பீர் திட்டமாக மாறிய வீடு தேடி கல்வித் திட்டம்: பிரச்சார குழுவை நீக்கி உத்தரவு!

சர்மிளா சங்கர் தலைமையில் ஆன கலைக்குழு நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் இந்த பிரச்சாரத்திலிருந்து நீக்கி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ர. பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இணையவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘கல்வி தொலைக்காட்சி’ மூலம் பாடம் நடத்தப்பட்டது. இருந்தும் இணையம், தொலைக்காட்சி போன்ற எவ்விதத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாத கிராமப்புற மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. பொதுமுடக்கத்தால் பல குடும்பங்கள் மரணம், உடல்நலப் பாதிப்பு, வேலையிழப்பு எனப் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகின. இதனால், மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் அதிகரித்தது. இப்படியான கொடும் சூழல்களிலிருந்து மாணவர்களை மீட்டெடுத்து அவர்களுடைய பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. கரோனா ஊரடங்கால் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைத்து மாணவர் களைப் பள்ளியை நோக்கி இழுக்கும் நோக்கத்துடன் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்கிற திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சில மாதங்கள் முன்பு தொடங்கி வைத்தார். மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தன்னார்வலர்களின் துணையோடு செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.

Watch Video: டாஸ்மாக் தேடி பீர் திட்டமாக மாறிய வீடு தேடி கல்வித் திட்டம்: பிரச்சார குழுவை நீக்கி உத்தரவு!

இந்த கல்வித்திட்டத்தின் படி மாணவர்களுக்கு தவறான கல்வி முறையும், மதம் சார்ந்த கல்வி முறையும் கற்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகளும் கல்வி அமைப்புகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்ததும், திமுக கூட்டணி கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அத்தகையை முறைகேடுகள் நடக்காது கல்வித்துறை தொடர்ந்து அறிவித்து வருகிறது. மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வீடு தேடி கல்வித்திட்டம் குறித்த புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த கலை மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பெற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் திருச்சியை சேர்ந்த சர்மிளா சங்கர் குழுவில் இருப்பவர்கள் வீடு தேடி கல்வித்திட்டம் சீருடையை அணிந்துகொண்டு மதுக்கடையை மது வாங்கி செல்லும் விடியோ வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது. 

அந்த நபர் அவர் வாங்கிய மதுவை எடுத்துக்கொண்டு வீடு தேடி கல்வித்திட்டத்திற்கு விழுப்புணர்வு பிரச்சாரத்திற்காக கொடுக்கப்பட்ட காரில் ஏறி புரப்படுகிறார். இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய கலை பயணம் சென்ற சர்மிளா சங்கர் தலைமையில் ஆன குழு நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக கூறி இந்த பிரச்சாரத்திலிருந்து நீக்கி திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட முதன்மை கல்வி அலுவலர் ர. பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.

Watch Video: டாஸ்மாக் தேடி பீர் திட்டமாக மாறிய வீடு தேடி கல்வித் திட்டம்: பிரச்சார குழுவை நீக்கி உத்தரவு! இவரை குறித்து ஏற்கனவே அந்த உத்தரவு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாவது, "திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டுவந்தது. இப்பிரச்சாரக்குழவில் ஒன்றான சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பயணக்குழு, கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டது. எனவே இக்குழு மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பயணக்குழு விழிப்புணர்வு பிரச்சாரத்திலிருந்து முழுமையாக நீக்கப்படுகிறது." என்று எழுதப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget